உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

உள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தித் திங்கள் சென்று திரும்பினர் பன்முறை அடுத்த மனையுளும் அடியிட லின்றி அடிநிலைத் தாழ்வில் அமிழ்ந்துளீர் நீரே

முதன்முதற் பொறிவினை முகிழ்த்தனர் நும்முனோர் மதிநீர் முதற்சென் றிருத்தல் வேண்டும்

திருவள் ளுவரீ ராயிர வாண்டைப்

பெருவிளம் பரமாய்ப் பேணிக்கொண் டாடினிர் அதனால் எதும்பய னானது முண்டோ

எள்ளள வும் அவர் சொல்லேற் றீரோ பிறப்பொடு தொடுத்த குலப்பிரி வினையால் கூண்டுள் விலங்குகள் போன்றடை பட்டே ஒற்றுமை குலைந்தும் உரனை இழந்தும் இனவுணர் வழிந்து மொழியுணர் வின்றிச் சிறுமை நிலையிற் பெருமை கொண்டீர் ஆரியன் பிறப்பால் உயர்ந்தான் அல்லன் அவனிலும் வெள்ளையர் ஐரோப் பியரே தட்ப வெப்பந் தன்னால் நாட்டு மக்கள் நிறமும் மாறுவ தியற்கை ஒன்றே குலமும் உடன்பிறப் பனைவரும் நிலத்தேவ ரென்றொரு குலத்தோரிங் கில்லை குடிமதிப் பிலும்பிற குறிப்புக் களிலும் தமிழன் என்றே தன்குலம் குறிக்க

வடமொழி தேவ மொழியு மன்றாம்

அதனினும் மூச்சொலி யடைந்தது காளவாய்

முழக்கும் மூச்சும் மொழியொலி பெறுகை

வழக்கில் நேர்ந்த வழிநிலைத் திரிபே

திரவிடத் தாயும் ஆரிய மூலமும் தெரியிடத் தேநம் தென்மொழி யாகும்

இந்திய நாகரி கந்தமிழ் ஆகும் பகுத்தறி வைப்பயன் படுத்தி யின்னே நிறந்துப் பரவு நிலைநீர் முத்திறம் ஆயினும் ஒரின மாத லறிக

அரசியற் கட்சி பலவா யிருப்பினும்

387