உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




388

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஆங்கிலர் போன்மொழி யணைமின் ஒருங்கே

தாழ்த்தப் பட்ட தம்மினத் தோரை

உயர்த்தப் பெற்றோர் உயர்த்தல் கடனே

பிரித்தா னியத்தினும் பிராம ணீயம்

பன்மடி கொடிதே பகரவுங் கொடிதே முன்ன தொருவன் உடலையே பிணித்தது. பின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும் கல்வியும் செல்வமும் கட்டாண் மையும் கணக்கின் பெருமையும் கரையற் றிருந்தும் சூத்திரர் சற்சூத் திரனெனத் தம்மைத் தாழ்த்திய தமிழர் வீழ்ச்சியை நோக்கின் அரிமா வரிமா கரிமா அனைத்தும் நீல நிறங்கொள் கோலங் கண்டே நரிமா விற்கு நடுங்கிய தொக்கும் உள்ளந் தமிழனுக் குயரா வாறு பெருங்கலா யிழுப்பது பிராமணர்க் கஞ்சுதல் ஆரிய வடிமை யகன்றா லொழியத் தேறும் வழியே தென்னவர்க் கில்லை ஆரிய வேடரின் அயர்ந்தனிர் மறந்தனிர் சீரிய மொழிநூல் செம்மையின் உணர்ந்தே ஓரின மாகி உலகத் துயர்க

பசியும் பிணியும் பகையும் நீங்கி இருதிற உடைமை ஆட்சியும்

ஒருகுடை நீழல் ஓங்குக உலகே.

-திருக்குறள் மரபுரை. 790-2.

‘திரு’

255. மருவ லர்கொள மன்பொரு னற்றபின் மரபி னாருளர் மைந்திலர் வாயிரு

திருவி ழந்தபின் திருவெனுஞ் சொல்லையும் ஒருவ நின்றவன் தமிழன் ஒருவனே

ச.செ.20:243