உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

389

முதுமொழியும் பொதுமொழியும்

256. முதுமொழி யொருதனி முத்தமிழ் முகிழ்த்தன புதுமொழி பலவுளும் பொலியும் ஆங்கிலம் பொதுமொழி யுலகெலாம் புகலும் அறிவியல் பொதுமொழி இந்தியாற் செறிவ தடிமையே

படைகொண்டார் நெஞ்சும்

உடல்உண்டார் மனமும்

இ.த.எ.கெ. 89.

257. கதறினும் தொண்டை நீளக் கந்தினும் புள்ளும் மாவும் பதறினும் நெஞ்ச மெல்லாம் பக்கமுந் தலையுங் காலும் உதறினும் அங்கும் இங்கும் ஓடினும் அரத்தம் பீறிச்

சிதறினும் இரக்கங் கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க வுண்டார்

குமிழியை ஒத்த வாழ்வு

-திருக். மர. 253.

258. இமிழ்கட லுலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினினும் இனிய பாவின் அருமறை பலவுஞ் சான்ற தமிழினை இழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை யொத்த வாழ்வே குலவிய மாநி லத்தே.

இ.த.எ.கெ.முக. 111

தமிழன் நிலை

259. கெடுக வுள்ளம் கேடிவன் கொள்கை தமிழன் எனவே தகவெதும் இலனே உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி நமிழென விளக்கினுந் தாழ்மொழி என்பான் பொன்னார் மேனிப் பொலிமுகம் வாய்ந்து

நன்னீராடி நல்லுடை யணிந்து

கல்வி தேர்ந்து கனம்பதம் பெற்று

நாகரி கத்தின் நன்கனம் வாழும்

நெல்லைச் சிவவூண் வெள்ளாண் குலவனும்