உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




390

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

பிறப்பில் இழிந்தோன் பெயரிற் சூத்திரன் இறக்குந் துணையும் இழிவின் நீங்கான் இருமுறை குளிக்கினும் இவன்துப் புரவிலன் இவன்கை யுண்ணல் இழிவென் றதன்மேல் கல்வி நிரம்பாக் கரியவ னேனும் இருகை யேந்தி இரப்பவ னேனும் அருந்தமி ழறியா அயலா னேனும் கொள்வான் விழுவான் கும்பிட் டெழுவான் அவனொரு தேவன் அருளிமண் வந்தோன் வழங்கா தெவர்க்கும் விளங்கா தெனினும் அவன்வாய் மொழியே ஆகுக வழிபட அவன்கை பட்டது அமுதே இங்ஙனம் இனியெந் நாளும் இருக்க எனுமே

குறள் இசைப்பாக்கள்

பல்லவி

260. இந்த உலகமெங்கும் செந்தமிழின் குறள்போல்

எந்த மொழியினும் உண்டோ?

அனுபல்லவி

சொந்தமா கவேபிறர் தந்தம் மொழியிற்பெற

- ம.வி.119

முந்தி விரைகுவரே விந்தை இதுவேயன்றோ

(இ)

சரணம்

புந்தியிற் புதுமலர் சிந்திய மதுநிகர்

தந்திடும் சுவையுறவே

வந்தனை சிரஞ்செய வாழ்த்திட வாயது

சிந்தனை மனமுறச் சிரவணம் செவிபெற

(இ)

திருவள்ளுவர் திருநாள்விழா மலர் பக்.126 இராகம் - தன்யாசி; தாளம் - ஆதி.