உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

23

ஈரீறுகள் எல்லா வினை முதனிலையும் அவற்றின் பல் வடிவுகளும் ஏற்கும்.

சில வினைமுதனிலைகள் தொழிற்பெயராகும்போது சிறிதும் பெரிதும் திரியும்.

எ-டு: நம்பு-நம்பிக்கை, குதி-கூத்து.

சில ஈறுகள் இரண்டும் பலவும் சேர்ந்து கூட்டீறாம்.

எ-டு: அல்+அம்=அலம். எ-டு: பொட்டலம்.

‘அலம்‘ ஈறு பின்வருமாறு திரியும்.

அலம்-அளம்-அணம்-அடம்.

அலம்-அனம்-அனை-ஆனை.

அலம்-அதம்-அரம்-அரவு. அதம்-அசம்.

எ-டு: தப்பளம், கட்டணம், கட்டடம்.

வஞ்சனம், வஞ்சனை, வாரானை. விளம்பரம். தேற்றரவு, உப்பசம்.

அகர முதலீறுகள் ஒத்த இகர உகர முதலீறுகளும் உள. இல்-எழில்(எழுச்சி), இதம்-தப்பிதம், இம்-(உரிம்)-(உரிந்)-

உரிஞ்+உராய்தல்.

உம்-பொரும்-பொருந்=பொருந்துதல்.

(4) அளவு குறித்த சொற்கள்

மானம்=அளவு. வருமானம்=வரும் அளவு. பெறுமானம்=

பெறுமதிப்பு.

காடு=மிகுதி. கடுத்தல் மிகுதல். கடு-காடு. வெள்ளக்காடு, பிள்ளைக்காடு என்னும் வழக்குகளை நோக்குக.

மானம்-தீர்மானம். காடு-வேக்காடு. விதைப்பு என்று பொருள் படும் விதைப்பாடு என்னும் சொல், அகப்பாடு, அடிப்பாடு, அருளிப்பாடு, கடப்பாடு, குறைபாடு, வெளிப்பாடு என்னும் சொற்கள்போல், படு என்னும் துணைவினை நீண்ட தொழிற்

பெயரே.

சாப்பாடு கூப்பாடு என்பவை, சாப்பீடு கூப்பீடு என்பவற்றின்

திரிபாம்.

(5) பண்புப் பெயரீறு

று

எ-டு: மை-வந்தமை, வருகின்றமை, வராமை.