உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

(6) வினைமுற்றீறு

அது-து-வந்தது, வருகின்றது, வருவது, வராதது.

தமிழ் வரலாறு

இதுவும் சுட்டடிச் சொல்லாயினும், வினைமுற் றீறாயிருத்தல் பற்றி வேறு கூறப்பெற்றது. வந்தது=வந்த அது. வராதது-வராத அது. தொழிற்பெயரீறுகளின் சிறப்புப் பொருள்

ஒரு வினைமுதனிலை பல ஈறுகள் பெற்றுப் பல்வேறு தொழிற் பெயரும் பண்புப் பெயரும் தொழிலாகு பெயரும் ஆகலாம். முதனிலை ஒன்றேனும் ஈறு வேறுபடப் பொருள் வேறுபடும்.

எ-டு:

நம்பு - நம்பிக்கை = உண்மையாகக் கொள்ளுதல் (belief) நம்பகம் (faith) = விசுவாசம் (வ.)

=

நம்பு (முதனிலைத் தொ. பொ.) = நம்பாசை (hope)

99

"நம்பும் மேவும் நசையா கும்மே.

கல்-கற்றல் = கற்குஞ் செயல்

(தொல்.உரி.31)

கற்கை = படிப்பு (learning)

கல்வி = நாட்டுப்படிப்பு முறை (education) கலை = கல்வித்துறை அல்லது பயிற்சிக்கல்வி.

கற்பு = தனிக் காதலொழுக்கம்.

நட-நடத்தல் = நடக்குஞ் செயல்.

நடக்கை = நாட்டு வழக்கு, ஒழுகும் முறை.

நடத்தை = ஒழுக்கம்.

நடப்பு = நிகழ்காலத்தது (That which is current)

நடை = மொழிப்போக்கு (style), வாசலுக்கு அடுத்த உட்பக்கம்

(threshold)

நட வை - வ= வழி, மொழிவழங்குமிடம்.

நடவு = ஆட்சி

வினையாலனையும் பெயரீறுகள்

(1) வினைமுற்றீறுகள்

தன்மை ஒருமை: ஏன் தன்மைப் பன்மை: ஏம், ஓம்

முன்னிலை ஒருமை:

ஆய்(ஈ-ஏ-ஐ-ஆய்)

முன்னிலைப்பன்மை: ஈம், ஈர்

ஈர், ஈங்கள், ஈர்கள்

எ-டு: வந்தேன்

""

وو

வந்தேம், வந்தோம்

வந்தாய்

வந்தீம், வந்தீர்

வந்தீங்கள், வந்தீர்கள்