உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தமிழ் இலக்கிய வரலாறு

நிலநூலியல் ஊழிகளுள் (Geological Eras) இறுதியதான

புத்தியலுயிர் ஊழியைச் (Cainozoic Era) சேர்ந்த நான்காம் மண்டலத்துக் (Quarternary Period) கழிபல்லண்மைக் (Pleistocene) காலப்பிரிவில் கி.மு. 4,75,000 முதல் கி. மு. 50,000 வரை நான்முறை பனிக்கட்டிப்படல முற்படர்ச்சி (Glacial Advance) வடகோளத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே, ஐரோப்பாவி லேனும் வட அமெரிக்காவிலேனும் மாந்தன் பிறந்தகம் இருந் திருக்க முடியாது.

முதற்கால மாந்தனுக்கேற்ற வெப்பமும் இயற்கை வளமும், நண்ணிலக் கோட்டைச் (Equator) சார்ந்த வெப்ப நாட்டிலேயே ருக்க முடியும். அத்தகைய நாடு முழுகிப்போன குமரிநாடே.

மாந்தன் தோன்றியது அல்லது படைக்கப்பட்டது எண்ணிற் கெட்டாத தொன்மைக் காலமாதலால், அத்தகைய தொன்மை வாய்ந்ததும் குமரிநாடே

ரு

இற்றை நில அமைப்பின்படி, இரு திணையுயிரிகளும் பாரெங்கும் பரவியிருக்கும் நிலைமை, குமரிக்கண்டத்தின் தென்கோடியை மாந்தன் பிறந்தகமாகக் கொண்டால்தான் விளங்கும்.

3. குமரிநாடே தமிழன் பிறந்தகம் (தோரா. கி.மு.50,000)

(1) இந்தியாவிற்குள்ளேயே வழங்கும் தமிழ் உள்ளிட்ட திரவிடமொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகள், தெற்கில் வரவரத் திருந்தியும் சொல்வளம் மிக்கும் தூய்மைப்பட்டும் இலக்கிய விலக்கணமுற்றும் செறிந்தும் உள்ளன.

திராவிடச் சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் மூலமும் முந்திய வடிவும் தமிழிலேயே உள்ளன.

(2) பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதல் கரு என்னும் இருவகைப் பொருள்களும், இன்றும் தென்னாட்டிற் குரியன வாகவே உள்ளன.

(3) பண்டைத் தமிழர் இறந்த போன தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றே குறித்தனர்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்

கைம்புலத்தா றோம்பல் தலை

99

"தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்

99

(குறள்.43)

(புறம்.9)