உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

5

(4) பண்டைத் தமிழ்க்கழகங்கள் மூன்றனுள், முதலிரண்டும் முழுகிப்போன குமரிநாட்டிலேயே இருந்தன.

(5) கி. பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்தவரும், செங்குட்டுவன் இளவலாரும், பல்கலைப் பெரும்புலவரும், முற்றத் துறந்த முழுமுனிவரும், நடுநிலை திறம்பாதவருமான இளங்கோவடிகள்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி

(சிலப். 11:19-22)

என்றும், கடைக்கழகக் காலப் புலவருள் ஒருவரான நெட்டிமையார்,

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"

(புறம்.9)

என்றும், தலைக்கழகத் தென்மதுரையைத் தன் கரைமேற் கொண்டிருந்த குமரிநாட்டுப் பஃறுளியாற்றையும், அக் காலத்துப் பாண்டியரையும் பாடியுள்ளார்.

(6) நடவரசன் தில்லை மன்று, தமிழ் ஞாலத்தின் நெஞ்சத் தாவாகிய நடுவிடமாகவே பாண்டியனால் அமைக்கப்பெற்றது.

தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரி மலைக்கும் நடுவிடத்தில் அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று.

(7) சிலப்பதிகார வேனிற்காதை முதலடிக்கு வரைந்த வுரையில்,

தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்ப தாயிற்று. ஆகவே, தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமு மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து...... நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியாவிரையு முள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சின வழுதி முதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத்தொன் பதின்மர் அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு