உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஏழ்பின்

தமிழ் இலக்கிய வரலாறு

பாலை

நாடும்,

மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க” என்று அடியார்க்கு நல்லார் சிறப்புக்குறிப்பு வரைந்துள்ளார். இது அவர் கட்டிக் கூறிய செய்தியாக இருக்க முடியாது.

இவற்றால், குமரிநாடே தமிழ் தோன்றிய இடம் அல்லது தமிழன் பிறந்தகம் என்பது, தெரிதரு தேற்றமாம்.

4. குமரிக்கண்டப் பரப்பு

66

ஒரு முதன்மையான னவியல் உண்மையும் சிறந்த பொருட்பாடுள்ளதும் எதுவெனின், போர்னியோவிலுள்ள தயக்கர் என்னும் மரபினர் மரமேறுவதைப்பற்றி உவாலேசு வரைந்துள்ள வரணனை, தென்னிந்திய ஆனைமலை வாணரான காடருக்கு ஒவ்வொரு நுண்குறிப்பிலும் முற்றும் பொருந்து மாதலால் அம் மலையிலும் எழுதப்படலாம் என்பதே. இந்தியத் தீவக்குறையில் (Peninsula), எனக்குத் தெரிந்தவரை, காடரிடையும் திருவாங்கூர் மலை வேடரிடையும் மட்டும் பெருவழக்காய் வழங்கும் வழக்கம், வெட்டுப்பற்கள் எல்லாவற்றையும் அல்லது அவற்றுட் சிலவற்றை மட்டும், அரம்பம் போலன்றிக் கூர்நுனைக் குவியமாகச் சீவிக்கொள் வதாகும். இந்தச் சீவல், காடரிடையே பையன்களுக்குப் பதினெட்டாம் அகவையிலும் பெண்பிள்ளை கட்குப் பத்தாம் அகவையில் அல்லது அதையடுத்தும், உளிகொண்டோ அறுவாள் கொண்டோ அரங்கொண்டோ செய்யப்படுவதாகச் சொல்லப் படுகின்றது. கீற்றும் (Skeat) பிளாகுதனும் (Blagden) மலையாத் தீவக்குறைச் சாக்குனர் (Jakuns) தம் பற்களைக் கூராகச் சீவிக்கொள்ளும் வழக்கத்தைக் கவனித்திருக்கின்றனர். திரு. கிராபோர்டு (Crawford) மலையாத் தீவகணத்தில் பல்லை அராவுவதும் கறுப்பாக்குவதும் திருமணத்திற்கு முந்தி நிகழ வேண்டிய சடங்கென்றும், பல்லை யராவியிருப்பது ஒரு பெண் மூப்படைந்திருப்பதைக் காட்டும் பொதுவான வகை யென்றும் நமக்குத் தெரிவிக்கின்றார். பர். (Dr.) கே. தி. (K.T) பிரெயசு (Preuss) ஒரு கட்டுரையில் மலாக்காவிலுள்ள சிறுநீகரோவரின் மூங்கிற் சீப்புகளிலுள்ள கோலங்களை நுட்பமாக