உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

முன்னுரை

வரணித்து, அவற்றைத் தென்னிந்தியக் காடர் அணியும் மூங்கிற் சீப்புகளிலுள்ள வியக்கத் தக்கவாறு ஒத்துள்ள கோலங்களுடன் ஒப்பு நோக்குகின்றார். அந்தக் கோலம், நான் சொன்னவாறு அணியியல் வடிவளவைக் கோலமன் றென்றும், படவெழுத்துகளின் தொடரென்றும், ஒரு கொள்கையை நுண்ணிதாக விளக்கிக் காட்டுகின்றார். கீற்றும் பிளாகுதனும் செமங்குப் (Semang) பெண்டிர் தம் முடியில் அணியும் வியப்பான சீப்புவகை, முற்றிலும் நோய்க்காப்பாகவே அணிவதாகத் தோன்றுகின்ற தென்று கவனித்துக் கூறுகின்றனர்.” இந்தச் சீப்புகள் பெரும்பாலும் மூங்கிலாலேயே செய்யப்பட்டு, கணக்கற்ற கோலங்களால் அணி செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் எந்த இரண்டும் என்றேனும் முற்றும் ஒத்ததில்லை. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சிறப்புக்கோலம் உரியதாகச் சொல்லப்பட்டது. அத்தகைய சீப்புகள் பெரக்கிலுள்ள பங்கன் (Pangan) செமங்கு சாக்கை (Sakai) மரபினராலும், செமங்குசாக்கைக் கலப்பு மரபினருள் மாபெரும்பான்மையராலும், அணியப்படுகின்றன. “திரு. வின்சென்று (Vincent) அவருக்குத் தெரிந்தவரை, காடர் சீப்புகள் நோய்க்காப்பாகக் கருதப்படவில்லை யென்றும், அவற்றிலுள்ள வரைவுகள் மந்திரக் குறிப்புக் கொண்டன வல்லவென்றும், எனக்குத் தெரிவித்திருக்கின்றார். ஒரு காடன் எப்போதும் ஒரு சீப்புச் செய்து, தன் மனைவிக்குத் திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணச் சடங்கின் இறுதியில், கொடுத்தல் வேண்டும். இளங்காளையர் தம்முள் யார் சிறந்த சீப்புச் செய்ய முடியுமென்று, ஒருவரோ டொருவர் இகலிக்கொண்டு செய் கின்றனர். சில சமையங்களில் அவர்கள் சீப்புகளிற் புதுமையான உருவங்களைப் பொறிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, திரு ௫. வின்சென்று ஒரு சுவர்க்கடிகார முகப்பை மிக நன்றாகப் பொறித்த ஒரு சீப்பைப் பார்த்திருக் கின்றார்.”

995

குமரிக்கண்டம் கிழக்கில் ஆத்திரேலியாவையும் மேற்கில் தென்னாப்பிரிக்காவையும் வடக்கில் இந்தியாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்த பெருநிலப் பரப்பாத லாலும், மாந்தன் தோன்றியதிலிருந்து தமிழர் முழுநாகரிகம் அடைந்ததுவரை, ஏறத்தாழ ஈரிலக்கம் ஆண்டு மக்கள் அதிற் குடியிருந்ததனாலும், அந் நிலவாணர் பல்வேறு நாகரிக நிலைப்பட்டவராயும் பல்வேறு மொழியினராயும் இருந்தனர். ஆயினும், மேற்பாகத்தினர் பெரும்பாலும் தமிழரும் கீழ்ப்பாகத்தினர் பெரும்பாலும் நாகரும் 5. C. T. S. I. Int. pp. xxi

-

ii