உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

தமிழ் இலக்கிய வரலாறு

ஆவர். நாகரிகரும் அநாகரிகருமாக நாகர் இருசாரார். நாகரிக நாகருள் ஒரு வகுப்பாரே குமரிக்கண்டத்தின் பெரும்பகுதி மூழ்கிய பின் அமெரிக்காவையடைந்து ‘மாயா' நாகரிகத்தை வளர்த்த தாகத் தெரிகின்றது.

5. குமரிநாட்டுத் தமிழ் (தோரா. 1,00,000-50,000)

உலகில் முதன்முதல் தோன்றிய திருந்திய மொழி தமிழே. மொழியமைப்பு

உணர்ச்சியொலிகள் (Emotional Sounds), விளியொலிகள் (Vocative Sounds), ஒப்பொலிகள் (Imitative Sounds), குறிப்பொலிகள் (Symbolic Sounds), வாய்ச்செய்கையொலிகள் (Gesticulatory Sounds), குழவிவளர்ப்பொலிகள் (Nursery Sounds), சுட்டொலிகள் (Deictic Sounds) என்னும் எழுவகை யொலிகளைக் கொண்ட இயற்கை மொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticulate Speech) முழுவளர்ச்சி யடைந்தபின், பண்பட்ட மொழி (Cultivated Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) தோன்றிற்று. முறையே சேய்மையண்மை முன்மையுணர்த்தும் ஆ, என்னும் முச்சுட்டுகளினின்றே, இழைத்தல் மொழி பெரும்பாலும் உருவாயிற்று. அம் மூன்றனுள்ளும் முன்மைச் சுட்டாகிய ஊகாரமே, தமிழ்ச் சொற்களுள் முக்காற் பங்கிற்கு மேற்பட்ட பகுதியைப் பிறப்பித்துள்ளது.

ஈ, ஊள

ஈகாரத்தினின்று ஏகாரமும் ஊகாரத்தினின்று ஓகாரமும், மோனைத் திரிவாகத் தோன்றின. முதற்கண் நெடிலாகவே தோன்றிய உயிர்கள் பின்னர்க் குறிலாகக் குறுகின. அகரமும் இகரமுஞ் சேர்ந்து ஐ என்றும், அகரமும் உகரமுஞ் சேர்ந்து ஔ என்றும், இரு புணரொலிகள் (Diphthongs) எழுந்தன. அவை ஒலியளவில் முறையே அய், அவ் என ஒலித்தன.

கொச்சை வழக்கில், இலை என்பது எலை என்றும் உனக்கு என்பது ஒனக்கு என்றும் ஒலிப்பதினின்று, ஏகார ஓகாரம் அல்லது எகர ஒகரம் மோனைத் திரிவாகத் தோன்றியமை அறியப்படும்.

இதழ் குவிந்தொலிக்கும் முன்மைச் சுட்டான ‘உ’ என்னும் விதையெழுத்து, லகரமெய்யீறு பெற்று ‘உல்' என்னும் மூல வேரையும் அதனொடு சொன்முதல் மெய்கள் சேர்ந்த குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் வழிவேர்களையும் தோற்றுவிக்க, அவ் வெழு வேரினின்றும் மூலவடியும் வழியடிகளும் திரிந்து, முன்மை, முன்வருதல் (தோன்றுதல்), முன்செல்லல் (செல்லல்),