உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

9

நெருங்குதல் (கூடுதல்), பொருந்துதல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துகளையும், அவற்றினின்று தோன்றும் நூற்றுக்கணக்கான கிளைக் கருத்து களையும், ஆயிரக்கணக்கான நுண்கருத்துகளையுங் கொண்டு, மாபெரும் பால் தமிழ்ச் சொற்களைப் பிறப்பித்துள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும், உலக வழக்குமொழி பொது மக்கள் அமைப்பும், இலக்கியம் புலமக்கள் அமைப்பும் ஆகும். குமரிநாட்டு மக்கள் நாகரிகம் முதிர்ந்து பண்பட்டவரும் நுண்மதியினருமா யிருந்ததனால், எல்லா எழுத்தொலி களையும் செவ்வையாக ஒலித்தும், எல்லாப் பொருள்களையும் வினைகளையும் நுட்பமாக வேறுபடுத்தி அவற்றிற் கேற்பச் சிறப்புச் சொற்களை வழங்கியும், பகுத்தறிவடிப்படையிற் பொருள்களைப் பாகுபடுத்தியும், தம் மொழியை வளர்த்தும் வழங்கியும் வந்தனர்.

ஒலியெளிமை

ச ட

அவர் உலகமுதல் மாந்தனினத்தாராதலின், அவர் வாயிற் பிற்காலத்திலும் பிறமொழிகளிலும் தோன்றிய வல்லொலிகள் எழவேயில்லை. தமிழிலுள்ளகசடதப வும் சமற்கிருதம் என்னும் வ மொழியிலுள்ள க (க்க) ச (ச்ச) ட (ட்ட) த (த்த) ப (ப்ப)வும், வன்மையில் ஒத்தனவல்ல. தமிழ்க்ககரம் இரட்டித்தால் தான் வட மொழித் தனிக்ககரத்தை ஒத்தொலிக்கும். ஆங்கிலத்தி லும் அங்ஙனமே. `maker' என்னும் சொல், 'மேக்கர்' என்றே இரட்டித்த ககரவொலி கொண்டிருத்தல் காண்க. இங்ஙனமே ஏனை வல்லினமும்.

மூச்சொலியும் (Aspirate Sound) தனித்த எடுப்பொலியும் தமிழுக் கின்மையால், மூச்சொலி கொண்ட வல்லெழுத்தோ எடுப் பொலி (Voiced Sounds) கொண்ட தனி வல்லெழுத்தோ தமிழில் இல்லவேயில்லை. மெல்லின மெய்களின் பின் அடுத்து வரும் வல்லின மெய்களே, தமிழில் எடுப்பொலி கொள்ளும்.

மூச்சொலியும் தனியெடுப்பொலியுங் கொண்ட தெலுங்கு, கன்னடம் முதலிய திரவிடமொழிகள், குமரி நாட்டுத் தமிழினின்றே திரிந்தனவேனும், மிகமிகப் பிற்காலத் தன வாதலின் அவ் வாரியத் தன்மையடைந்தனவென அறிக.

இவ் வுண்மை யறியாதார், தமிழிலும் முதற்காலத்தில் எடுப் பொலிகள் (g, j, d, d, b,) இருந்து, பின்னர் எடுப்பிலாவொலி களாக மாறின எனப் பிதற்றுவர். தமிழ் தோன்றியது குமரி நாடென்னும்