உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

எ-டு: வந்தேன், வந்தேம்.

தமிழ் இலக்கிய வரலாறு

இல்லிருந்து, இனின்று என்னும் 5ஆம் வேற்றுமையுரு புகள், க்காலத்திற்போல் இடத்திலிருந்து டத்திலிருந்து இடத்தினின்று என்றும் வழங்கியிருக்கலாம்.

ஏ' என்னும் அடி ‘யா' என்று திரிந்தபோது, யான், யாம், யாங்கள் என்னும் வடிவுகள் தோன்றின. ஆயின், அவை வேற்றுமை யேற்காது எழுவாயளவில் நின்றுவிட்டன, ஆதலால், அவற்றிற்கும் ஏம், ஏங்கள் என்பவற்றின் வேற்றுமை வடிவுகளே உரியவாயின.

‘யா' என்னும் திரிவடி 'நா' என்று திரிந்தபோது, நான், நாம், நாங்கள் என்னும் வடிவுகள் தோன்றின. அவை பின் வருமாறு வேற்றுமையேற்றன.

ஒருமை

பன்மை

இரட்டைப் பன்மை

1. நான்

2. நன்னை

3. நன்னால், நன்னொடு

4. நனக்கு

நாம்

நாங்கள்

நம்மை

நங்களை

நம்மால்,

நங்களால்,

நம்மொடு

நங்களொடு

நமக்கு

நங்களுக்கு, நங்கட்கு

5. நன்னிலிருந்து

நம்மிலிருந்து

நங்களிலிருந்து

நன்னினின்று

நம்மினின்று

நங்களினின்று

6. நன்

நம்

நங்கள்

(நனது, நன)

(நமது, நம)

7. நன்னிடம்

(நங்களது, நங்கள) நங்களிடம்

நம்மிடம்

‘நா’ என்னும் திரிவடியால் ஒருமைப்பெயர் வடிவிற் பொருள் வேறுபாட்டிற்கு இடமின்றேனும், பன்மைப் பெயர் வடிவிற் சிறந்த பொருள் வேறுபாட்டிற்கு இடமுண்டாயிற்று. நாம், நாங்கள் என்பன, தன்மையோடு முன்னிலையை உளப் படுத்தும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர்களாயின.

எ-டு: நாம் = நானும் நீயும், யாமும் நீமும் (நீரும்) ஏங்கள் என்பதற்குச் சொன்ன குறிப்பை நாங்கள் என்பதற்குங் கொள்க.

நாங்கள் என்பது, இற்றைத் தமிழில் முன்னிலையை உளப்படுத்தாது தவறாக யாங்கள் என்பதற்குப் பகரமாக (பதிலாக) வழங்குகின்றது.