உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

15

வடிவிற்குச் சொன்னதே, நீயிர், நீவிர் என்னும் வடிவுகட்கும் ஒக்கும்.

தெற்கில் ஏறத்தாழ ஈராயிரங் கல் தொலைவு பரந்திருந்த குமரிநாடு முழுகிப்போனமையால், அதில் வழங்கிய ஆயிரக் கணக்கான உலக வழக்குச் சொற்கள் இறந்துபட்டன. முதலிரு கழகத்தாலும் இயற்றப்பட்டும் போற்றப்பட்டும் வந்த ஆயிரக் கணக்கான தனித்தமிழ் நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டமை யால், அவற்றில் வழங்கிய ஆயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சொற்களும் இறந்துபட்டன. ஆதலால், மேற்காட்டிய தன்மை முன்னிலைப் பெயர்கள் சிலவற்றிற்கும், அவற்றின் வேற்றுமை வடிவுகட்கும், இன்று எடுத்துக்காட்டில்லையென அறிக.

வவ

எட்டிற்குமேல் அடுத்த எண்ணின் பெயர் அக்காலத்தில் 'தொண்டு' என்றே வழங்கிற்று.

தொண்டு

தொண்பது

தொண்ணூறு

தொள்ளாயிரம்

தொண்பதினாயிரம்

தொள்ளிலக்கம்

தொண்பதிலக்கம்

தொண்கோடி

9

90

900

9,000

90,000

=

900,000

9,000,000

90,000,000

ஒன்று முதல் பத்துவரை எண்ணுப்பெயர்கள் தனிச் சால்லாகவும் உகரவீறு கொண்டுமே இருந்தன.

பலுக்கற் செம்மை

கண், மான், ஊர், கல், கூழ், ஆள் என்பன போன்ற பெயர்களும், எண், ஈன், பார், சொல், உமிழ், கேள் என்பன போன்ற வினைகளும், உகர வீற்றைத் துணைக் கொள்ளா மலும், தாய், வாய் என்பன போன்ற பெயர்களும், செய், சாய் என்பன போன்ற வினைகளும், இகரவீற்றைத் துணைக் கொள்ளாமலும் ஒலித்தன.

மரம், அவன் என்பன போன்ற பெயர்களும், வந்தான், போனான் என்பன போன்ற வினைகளும், இறுதி மெல்லின மெய் மூக்கொலியளவிலன்றி முற்றும் செவ்வையாக ஒலித்து வழங்கின.