உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தமிழ் இலக்கிய வரலாறு

அவள், மகள் என்பனபோன்ற பெயர்களும், வந்தாள், போனாள் என்பன போன்ற வினைகளும், இறுதி ளகரமெய் ஒலித்தே வழங்கின.

இலக்கண நடை

இருக்கிறது, இருந்தது

யொன்றன்பால்

என்பன போன்ற

படர்க்கை

வினைகளெல்லாம், கொச்சைவடிவிலன்றி

இலக்கண வடிவிலேயே வழங்கின.

எல்லா வினைமுற்றுகளும் எழுவாய்க் கேற்ற ஈறு பெற்றே

வழங்கின.

எ-டு: நான் (யான்)

அல்லேன்

யாம், நாம்

அல்லேம், அல்லோம்

நீ

அல்லை

நீம்

அல்லீம்

நீர் (நீயிர், நீவிர்) அல்லீர்

நீங்கள்

அல்லீங்கள்

அவனல்லன், அவளல்லள், அவரல்லர், அவர்களல்லர் கள்,

அதுவன்று, அவையல்ல.

அன்மை யின்மைப் பொருட் சொற்கள் தெளிவாக வேறு படுத்தப்பட்டன.

எ-டு: அவன் வீட்டில் இல்லை.

அவன் புலவன் அல்லன்.

இருதிணைப் பகுப்பு

குமரிநாட்டுத் தமிழர் பண்பாட்டிலும் பகுத்தறிவாற் றலிலும் தலைசிறந்திருந்ததனால், பகுத்தறி வடிப்படையி லேயே உயர்வகுப்பு தாழ்வகுப்பு என எல்லாப் பொருள் களையும் இருவகுப்பாக வகுத்து, பகுத்தறிவுள்ள உயிர் மெய்களைக் குறிக்குஞ் சொற்கட்கே பாலீறு கொடுத்தும், அஃதில்லாத உயிர்மெய்களைக் குறிக்குஞ் சொற்கட்கு எண்ணீறே கொடுத்தும், சொற்றொடர் அமைத்தனர்.

எ-டு: உழவன் உழுகின்றான்.

உழத்தி களையெடுக்கின்றாள். அவன் வந்தான்.

அவள் போனாள்.

உயர்வகுப்பு