உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

17

காளை உழுகின்றது. ஆவு மேய்கின்றது.

ஆண்பனை வளர்கின்றது. பெண்பனை காய்க்கின்றது.

அது வந்தது.

அவை போயின.

தாழ்வகுப்பு

இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பல்' என்னும் முறையில், இலக்கண நூலார் பகுத்தறிவுள்ள மக்களை உயர் திணை யென்றும், அவரல்லாத உயிருள்ளனவும் இல்லனவு மான எல்லாவற்றையும் அஃறிணை யென்றும், குறித்தனர்.

மக்களைப் படைத்தவரும் எல்லாம் அறிந்தவருமான, இறைவன் உயர்திணை யென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

இவ் விருதிணைப் பகுப்பு தமிழுக்கே சிறப்பாம். தெலுங் கில் இத்தகைய தொன்றிருப்பினும், அது தமிழைப் பின்பற்றியதே. சொல்வளம்

குமரிநாட்டு ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற் களும், இலக்கிய வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பின்பும், தமிழ் ஒப்புயர்வற்ற சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, இன்றும், சொல்லுதலைக் குறிக்க அறை, இயம்பு, இசை, உரை, என், ஓது, கிள, கிளத்து, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், நுதல், நுவல், நொடி, பகர், பறை, பன்னு, பனுவு, புகல், பேசு, மாறு, மிழற்று, மொழி, விள், விளத்து, விளம்பு முதலிய சொற்களும்,

ஓடுதலைக் குறிக்க, ஓடு, கிண்ணு, தொங்கு, பரி முதலிய

சொற்களும்,

யானையைக் குறிக்க, ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கடமா, கரி, கறையடி, குஞ்சரம், கைம்மலை, கைம்மா, தும்பி, தூங்கல், தோல், நால்வாய், பூட்கை, பொங்கடி, மறமலி, மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலிய பொதுச் சொற்களும்; சிந்துரம், பிணிமுகம், புகர்முகம் முதலிய சிறப்புச் சொற்களும் உள்ளன.

அறை' முதல் ‘விளம்பு' ஈறாகக் குறிக்கப்பட்ட சொற்க எல்லாம், சொல்லுதல் என்னும் பொதுப்பொருளில் ஒத்தன வேனும், சொல்லுதல் வகையான சிறப்புப் பொருளில் வேறு பட்டனவாம். இங்ஙனமே ஏனையவும்.