உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தமிழ் இலக்கிய வரலாறு

குமரிநாட்டுத் தமிழே தமிழே திரவிடமொழிகட் கெல்லாந்

தாயாதலால், முன்னதன் ஒருபொருட் சொற்களினின்றே, பின்னவற்றுள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு சொல்லைத் தெரிந்தெடுத்தாளுகின்றது. இது தாய் வீட்டிலுள்ள, ஒரு னைக்குப் பயன்படும் பல்வகைக் கலங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு மகளும் எடுத்துப் புழங்குவது போன்றது.

செப்பு (தெலுங்கு)

எ-டு: செப்பு

கிள

ஹேளு (கன்னடம்)

பறை

பற (மலையாளம்)

செப்பு' என்னும்

வினைச்சொல்,

தமிழில்

விடை

சொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளிலும், தெலுங்கிற் சொல்லுதல் என்னும் பொதுப் பொருளிலும் வழங்கும். இங்ஙனமே ஏனைச் சொற்களும் தன்தன் சிறப்புப் பொருளை இழக்கும்.

பறைதல் என்னும் சொல், “ஏதம்பறைந் தல்ல செய்து” (திவ். திருவாய். 4:6: 8) என்று இலக்கிய வழக்கிலும், சொல்லாமற் பறையாமல் ஓடிப் போய்விட்டான் என்று உலக வழக்கிலும் வழங்குதல் காண்க.

வீட்டைக் குறிக்குஞ் சொற்களுள், இல் என்னும் தெலுங்குச் சொல்லும் மனை யென்னும் கன்னடச் சொல்லும் மட்டுமன்றி, சமற்கிருதத்திலும் பின்னிய (Finnish) மொழி களிலும் வழங்கும் குடியென்னும் சொல்லும் தமிழிலுள்ள தென்று, தமிழின் ஒருபொருட் சொல்வளத்தைக் கால்டு வெலார் வியந்திருத்தலை நோக்குக.

சமற்கிருதம் பிராகிருத மொழிகளினின்றும் தமிழினின் றும், ஆங்கிலம் உலக மொழிகளுட் பலவற்றினின்றும், ஏராள மாகக் கொண்டிருப்பதால், அவற்றிலுள்ள ஒருபொருட்

கடன்

சொல்வளத்தை வியத்தற்கில்லை.

திரவிட மொழிகளிலுள்ள சில சொற்கள் இற்றைத் தமிழில் இல்லையெனின், அவை குமரி நாட்டுத் தமிழில் வழங்கி இறந்துபட்டன என்றறிதல் வேண்டும். சொல்லிற்குச் சொன்னதே சொல்வடிவிற்கும்.

சொல்வடிவுகளுள் முன்னதைப் பின்னதினின்று வேறு படுத்தியறிதற்கு, மொழியாராய்ச்சியொடு கூடிய சொல்லா ராய்ச்சி வேண்டும்.