உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

19

நால்-நால்கு - நான்கு

தெ. நாலுகு (g), க. நால்கு (k)

'வாலுளைப் புரவி நால்குடன் பூட்டி

நால்கு என்பது தமிழ்வடிவே.

தூய்மை

99

(பெரும்பாண். 489)

முதலிரு கழகக் காலத்திலும் ஆரியர் தென்னாடு வராமை யால், அக் கழகங்கள் இருந்த குமரிநாட்டுத் தமிழ், ஒலியிற் போன்றே சொல்லிலும் பொருளிலும் இலக்கியத்திலும் கருத்திலும் முழுத் தூய்மை பெற்றிருந்தது. இலக்கியத்துள் இலக்கணமும் அடங்கும். 6. குமரிநாட்டுத் தமிழர் (தோரா. கி.மு. 50,000-10,000)

குமரிநாட்டுத் தமிழர், பெரும்பாலும் ஐந்திணைப்பட்ட நாட்டுப் புறத்தாரும், சிறுபான்மை திணைமயக்குற்ற நகர வாணருமாக, இருவகை வாழ்ச்சியராய் இருந்துவந்தனர்.

குறிஞ்சிநிலை மாந்தர், கொல்லியும் பறம்பும் போன்ற மலைகளையடுத்துக் கூட்டங்கூட்டமாகக் குடிசைகளில் தங்கி, வேட்டையாடியும் கிழங்ககழ்ந்தும் தேனெடுத்தும் தினை விளைத்தும், முரட்டுக் கம்பளியுடுத்தும் முருகனை வணங்கி யும், வாழ்ந்து வந்தனர். உணவுப் பொருள்களைச் சுடுவதற்கும் எளிய முறையிற் சமைப்பதற்கும், இரவிற் கொடிய விலங்கு களை ஓட்டுவதற்கும், தீக்கடை கோலால் தீயுண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் குடியிருப்புக் குறிச்சியென்றும் சிறு குடியென்றும் பெயர் பெற்றன.

குறிஞ்சிநில மகளிர் குறிசொல்வது குறம் எனப்பட்டது. அதனாற் குறவர் என்றும், வேட்டையாடுவதால் வேட்டுவர் என்றும், குறிஞ்சிநில மாந்தர்க்கு இருபெயர்கள் உண்டாயின.

முல்லைநில மாந்தர், புல்வெளியுள்ள காடுகளை யண்டி, ஆடுமாடெருமையாகிய முந்நிரைகளையும் வளர்த்து பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஆனைந்தை மருதநிலத்தும் பாலை நிலத்தும் விற்றும், வரகு, சாமை, அவரை துவரை முதலிய வானாவாரிப் பயிர்களை விளைத்தும், பஞ்சாடையும் மென் கம்பளியும் உடுத்தும், புல்வளர்ச்சிக்கு இன்றியமையாத மழைபொழியும் முகில் வண்ணங் கொண்ட மாயோன் (கரியோன்) என்னும் தெய்வத்தை வணங்கியும், வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடியிருப்பு, பாடியென்றும் சேரியென்றும் பெயர் பெற்றன.