உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தமிழ் இலக்கிய வரலாறு

ஆயர், இடையர், பொதுவர், தொழுவர், தொறுவர், கோவர், கோவலர் என்பன முல்லைநிலத்தார் பெயர்கள்.

கோ (ஆன்) மேய்ப்பதில் வல்லவர் கோவலர் ஆன் வல்லோர் என்று திவாகரத்திலும், ஆன்வல்லவர் என்று சூடாமணியிலும், குறிக்கப்பட்டிருத்தல் காண்க.

கண்ணகி கணவனாகிய கோவலன் பெயரே கோபால என்னும் வடசொல்லின் திரிபாகும். அதிலும் கோ என்பது தென்சொல்லே.

காட்டுமாடுகளைப் பிடிப்பதற்கும் வீட்டுமாடுகளை அடக்கு தற்கும் மறவலி வேண்டியிருந்ததனால், ஆயர் தம் மகளிரைக் கொல்லேறு பிடித்தடக்கிய ளைஞர்க்கே மணஞ்செய்து கொடுத்தனர். கொல்லேறடக்கல் ஏறுதழுவல் எனப்பட்டது. ஆட்டிடையர் (புல்லினத் தாயர்) என்றும் என்றும் மாட்டிடையர் (நல்லினத்தாயர்) என்றும், ஆயர் இரு வகையராய்ப் பிரிந்தனர்.

மருதநில மக்கள் நிலவளமும் நீர்வளமும் மிக்க இடங்களில் தங்கி, நெல் கரும்பு வாழை முதலிய நன்செய்ப் பயிர்களையும் சோளம் கேழ்வரகு முதலிய புன்செய்ப் பயிர்க ளையும் விளைத்து, பஞ்சாடையும் பட்டாடையும் கம்பளியா டையும் அணிந்து, வேந்தன் (இந்திரன்) என்னும் வானவர் கோனை வணங்கி, மண்ணாலுங் கல்லாலுஞ் செங்கலாலும் கட்டிய மச்சுவீடுகளிலும் ஓட்டு முகட்டு வீடுகளிலும் கூரை வீடுகளிலும் வதிந்து, நிலையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடியிருப்பு மட்டும் ஊர் என்று பெயர்பெற்றது.

உர்-உறு. உறுதல் = பொருந்துதல், நிலத்தோடு பொருந்து தல், நிலையாகக் குடியிருத்தல். உர்=உறு. உர்-ஊர். ஒ.நோ;

உண்-ஊண்.

பயிர்த்தொழிலில்

முதல்வினை உழவாதலால், அத் தொழிலும் உழவெனப்பட்டது. அதைச் செய்தவர் உழவர் எனப்பட்டனர்; போரடிக்குங் களத்தில் வேலை செய்வது பற்றிக் களமர் என்றும் பெயர் பெற்றனர்.

பெருநிலக்கிழாரெல்லாரும் பிறரைக் கொண்டே வினை செய்து, வீட்டிலிருந்து நிழலில் வாழ்ந்ததனால், சற்று வெளுத்துப் போய் வெள்ளாளரென்றும் வெண்களம ரென்றும்; சிறுநிலக் கிழாரும் நிலமிலிகளும் கடுவெயிலிலுங் காட்டிலும் வேலை