உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

21

சய்து கருத்துப் போனதினால், காராளரென்றும்

கருங்களமரென்றும் சொல்லப் பட்டனர். இங்ஙனம், உழுதுண் பார், உழுவித்துண்பார் என உழவர் இரு வகுப்பாராயினர்.

மருதநில மக்கள் நிலையாக வாழ்ந்ததனால், அவர்கள் குடியிருப்புகள் நாளடைவிற் பேரூரும் மூதூருமாயின. அவற்றுட் சில நகரும் நகரமும் ஆயின. நகரம் மாநகர்.

உழவருக்குப் பக்கத்துணையாக நெயவர், குயவர், தச்சர், கொல்லர், பறம்பர் (தோல்வினைஞர்), மயிர்வினைஞர், வண்ணார், செக்கார் முதலிய பதினெண் தொழிலாளரும், பிற நுண்வினைஞரும்; படிப்படியாகத் தோன்றினர். நகரத்தில் நாகரிகந் தோன்றி வளர்ந்தது.

கடல்நீரால் உப்பு விளைத்தற்கும், ஆறு குளங்கள் நீர் வற்றியபின் கடல்மீன் பிடித்தற்கும், முத்துக் குளித்தற்கும், சில கூட்டத்தார் நெய்தல்நிலத்தில் வதிந்தனர். அவர்கள் குடியிருப் புக் குப்பம், கரை, துறை, காயல், கானல் எனப் பல்வேறு பெயர் பெற்றன.

நெய்தல்நிலத்தார், இடத்திற்கும் கருவிக்கும் தொழிலுக் கும் ஏற்ப, கரையார் என்றும், படவர் - பரவர் என்றும், முக்குவர் என்றும், அளவர் என்றும், பெயர்பெற்றனர். அவர் வணங்கியது வாரணன் என்னும் கடல் தெய்வம்.

முல்லையுங் குறிஞ்சியும் கடுங்கோடைக் காலத்திற் சில விடங்களில் வற்றிவறண்டு விளைச்சலின்றிப் பஞ்சநிலை ஏற்பட்டபோது, பாலையெனப்பட்டன. அத்தகைய சமையங் களில், அந் நிலவாணர் வழிப்பறிக்கவும் அக்கம் பக்கங்களிற் கொள்ளையடிக்கவும் நேர்ந்தது. மூவேந்தரும் அவரைத் தம் படை மறவராக்கியும், தாம் பகைத்த அரசரின் நாடுகளினின்று ஆநிரைகளைக் கவர்ந்துவர ஏவியும், வந்தனர்.

பாலைநில வாணர் கள்ளர், மறவர், எயினர், வேட்டுவ எனப் பலவகுப்பினர். அவர்கள் குடியிருப்பு குடிக்காடு, நத்தம், பறந்தலை, சேரி எனப்பட்டன. அவர்கள் தெய்வம் காளி.

மருதநிலப் பேரூர்களில், முதற்கண் ஒவ்வொரு தொழி லாளரும் தத்தம் விளைபொருள்களையும் செய்பொருள் களையும் நெல்லிற்கும் பிறவற்றிற்கும் பண்டமாற்றுச் செய்து வந்தனர். பின்னர் எல்லாப் பொருள்களையும் வாங்கிவிற்கும் வணிகர்