உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமிழ் இலக்கிய வரலாறு

தோன்றினர். முதலில் உள்ளூர்ப் பொருள் விற்பனை யும், பின்னர் வெளியூர்ப் பொருள் விற்பனையும், அதன்பின் வெளிநாட்டுப் பொருள் விற்பனையுமாக, வணிகம் வளர்ந்து 6 வந்தது. நிலவாணிகத்தின் பின் நீர்வாணிகம் தோன்றிற்று. நில வாணிகர் சாத்துவர் என்றும், நீர்வாணிகர் நாவிகர் (நாய்கர்) என்றும் பெயர் பெற்றனர்.

மக்கள்தொகை பெருகியபின் களவுங் கவர்வும் மிகுந்த தனால் பொருட்காப்பிற்கும் வழக்குத் தீர்ப்பிற்கும் ஆட்சிக்கும் காவலன் ஏற்பட்டான். குடும்பத்தலைவன் நிலைமையில் தொடங்கிய ஆட்சிப் பதவி, ஊர்த்தலைவன், வேள் (குறுநில மன்னன்), கோ (பெருநில அரசன்), வேந்தன், மாவேந்தன் (பேரரசன்) எனப் படிப்படியாக வுயர்ந்தது. வேந்தன் ஏற்பட்ட பின் அவனுக்கடங்கிய சிற்றரசர்க்கு மகுடம் அணியும் உரிமை இல்லாது போயிற்று. இயல்பாகவே பண்டமாற்றினால் ஏற்பட்ட திணைமயக்கம், ஐந்திணை நிலங்களையும் சேர்த் தாண்ட வேந்தன் காலத்தில், மிக விரிவடைந்தது. வேய்ந்தான் - வேய்ந்தன் - வேந்தன் முடியணிந் தவன். வேய்தல் தலைமேலணிதல். இங்ஙனம் குறுநில அரசர், பரு நில அரசர் என ஆள்வார் இருவகையராயினர். பாண்டியன் சோழன் சேரன் என்ற முறையில் முக்குடி வேந்தர் தோன்றி, ஆட்சிக்கு மருதநிலத்தில் ஒன்றும், நீர்வாணிகத்திற்கு நெய்தல் நிலத்தில் ஒன்றுமாக, இரு மாநகரமைத்து ஆண்டனர். மருதநிலத் தலைநகரெல்லாம்

=

பேராற்றங்கரை மேலேயே அமைந்திருந்தன.

உலக

நாகரிகம் வளர்ந்து பாதுகாப்பும் ஏற்பட்டபின், உழுவித் துண்ணும் உழவரான வெள்ளாளர் தம் ஒழிவு நேரங்களிற் கல்வியை வளர்த்து வந்தனர். இம்மைக்குரிய உலகியற் கல்விக்குப் பின், மறுமைக்குரிய மதவியற் கல்வி தோன்றிற்று. வாழ்க்கையில் வெறுப்புற்றவர் துறவை மேற்கொண்டனர். கற்றோருள் இல்லறத்தார் நூல்களைப் பார்ப்பதனாற் பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்றும், துறவறத்தார் எல்லாவுயிர் களிடத்தும் அருள் பூண்டமையால் அந்தணர் என்றும், பெயர் பெற்றனர். இங்ஙனம், கற்றோர் பார்ப்பாரும் அந்தணரும் என

இருதிறத்தாராயினர்.

சிலர், பார்ப்பனர் என்னும் சொல் பிராமணன் என்னும் வட சொல்லின் திரிபென்றும், துறவு நிலை பிராமணனுக்கேயுரிய தென்றும், பிதற்றிப் பேதையரை ஏமாற்றுவர். குமரி நாட்டுத்