உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

23

தமிழர் காலம் ஆரியர் என்னும் இனக் கருவே தோன்றாத காலம். பாட்டனைப் பெற்ற பூட்டன் மணவாத இளமைக் காலத்தில் கொட்பேரன் எங்ஙனம் தோன்ற வில்லையோ, அங்ஙனமே குமரிநாட்டுத் தமிழன் காலத்திலும் ஆரியன் தோன்றவில்லை. அதனால் அவன் திரிமொழியும் தோன்றவில்லை.

"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்

99

(குறள்.33)

என்னுங் குறளினின்று, பார்ப்பான் என்னும் பெயர்க் கரணியத் தையும்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்'

99

(குறள்.30) என்னுங் குறளினின்று, அந்தணன் என்னும் பெயர்க் கரணியத் தையுங் கண்டுகொள்க.

சிலர், பார்ப்பனன் என்னும் சொல்வடிவு பிராமணன் என்பதைப் பின்பற்றிய தென்பர். ‘ஆன்', ‘அனன்’ என இரு வகையீறுகளைப் பெறுவது தமிழ் வினைமுற்றுகளின் இயல்பே.

எ-டு:

இ.கா.

நி.கா.

எ.கா.

பார்த்தனன்

பார்க்கின்றனன்

பார்ப்பனன்

பார்த்தனள்

பார்க்கின்றனள்

பார்ப்பனள்

பார்த்தனர்

பார்க்கின்றனர்

பார்ப்பனர்

பார்த்தன்று

பார்க்கின்றன்று

பார்த்தன

பார்க்கின்றன

பார்ப்பன

அனது - அன்று (அன் + து). பார்த்தன்று = பார்த்தது.

மருதநிலத்தில் உழவர், வணிகர், அரசர், பார்ப்பார் என்னும் நால் வகுப்பாரும் தோன்றியபின். வேளாண்மை செய்து விருந்தோம்புவதில் வெள்ளாளரும் காராளருமான இருவகை யுழவரும் தலைசிறந்ததனால், வேளாளர் எனப் பட்டனர். திணைமயக்கம்

மருதநிலத்துக் கோநகர்களும் தலைநகர்களும் நகரங் களாக (மாநகர்களாக) விரிவடைந்தபோது, முல்லை நிலமும் சிலவிடத்துக்