உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தமிழ் இலக்கிய வரலாறு குறிஞ்சிநிலமும் படிப்படியாக அடுத்து அடுத்து வந்தன. வந்தன. காவிரிப் பூம்பட்டினம் போன்ற நெய்தல் நகரங்களில், மருத மும் முல்லையுங் கலந்தன. சேர நாட்டு வஞ்சி போன்ற நகரங் களில் ஐந்திணையுங் கலந்தன.

நெய்தல் நகரங்களெல்லாம் பட்டினம் என்றும், அவற்றின் பிரிவுகள் பாக்கம் என்றும் பெயர்பெற்றன.

மருதநிலத் தூர்கட்கு, முதற்கண், நெய்தல்நில மாந்தர் உப்பும் மீனும் சங்கும் பவளமும் போன்ற கடல்படு பொருள் களையும், முல்லைநில மாந்தர் ஆனைந்தையும், குறிஞ்சிநில மாந்தர் தேனும் இறைச்சியும் மருப்பும் (தந்தமும்) காசறையும் (கஸ்தூரியும்) போன்ற மலைபடு பொருள்களையும், கொணர்ந்து நெல்லிற்கும் ஆடைக்கும் மாற்றினர். பின்னர், பிழைப்பிற்காகச் சிலர் நகர் தொறும் வந்து குடியேறினர். பாலை நில மறவரும் காவல்தொழிற் கமர்ந்தனர்.

குறிச்சி

திருநாள், பெருநாள், பொருநாள் ஆகிய முந்நாள் களிலும், ஐந்திணை மக்களும் கலந்தனர். அங்ஙனங் கலந்து உரையாடும் போது, மருதவாணனை நோக்கி உன் உன் ஊர் ஊர் எதுவென்றும், முல்லைவாணனை நோக்கி உன் பாடி (அல்லது சேரி) எதுவென்றும், குறிஞ்சிவாணனை நோக்கி உன் எதுவென்றும், நெய்தல் வாணனை நோக்கி உன் குப்பம் (அல்லது துறை) எதுவென்றும், பாலைவாணனை நோக்கி உன் குடிக்காடு எதுவென்றும், வினவுவதே இயல்பும் வழக்கமும். பேரூர்களிலும், மூதூர்களிலும் பல தொழிலாளரும் நிலத்தாரும் கலந்து, திணைமயக்கம் மிகுதியாக ஏற்பட்டபோது, ஐந்திணைக் குடியிருப்பும் ஊர் என்னும் பொதுப்பெயர் பெற்றன.

குலவகுப்பு

முதற்கண், நிலந்தொறும் ஒரு வகுப்பாக ஐந்திணைக் குலங்கள் தோன்றின.

பின்னர் மருதநிலத்தில், உழவர்க்குப் பக்கத் துணையாகப் பதினெண் கைத்தொழிற் குலங்கள் தோன்றின.

அதன்பின் வணிகர், அரசர், பார்ப்பார் என்னும் குலங் கள் அல்லது குடிகள் தோன்றின. அரசர் என்றது, வேந்தரும் வேளிரும் போல வழிவழியாக வந்த அரசர் குடும்பங்களையே.

கல்விச் சிறப்பும் ஒழுக்க வுயர்வும் பற்றிப் பார்ப்பாரும் சிலவிடத்து அந்தணர் எனப் பெற்றனர்.