உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

25

ஒவ்வொரு குலமும் நாளடைவில் இரண்டும் பலவுமாகக்

கிளைத்துப் பல்கிற்று.

எல்லாக் குலங்களும் தொழிலடைப்படையிலேயே தோன்றியியங்கின. ஒருவன் எத்தொழிலையும் மேற்கொள்ள லாம். செய்யுந் தொழில்பற்றியே ஒருவன் குலம் அமைந்தது. ஆயின், தந்தையறிவும் ஆற்றலும் மனப்பான்மையும் இயல் பாகவே மகனுக்கு அமைந்து விட்டதனாலும், ஒவ்வொரு வனும் பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோனைப் பின்பற்றி ஒரு தொழிலிற் பயிற்சி பெற்றுவிட்டதனாலும், தலைமுறை தொறும் மரபுத் தொழிற்றிறமை வளர்ச்சியடைந்து வந்தத னாலும், மக்கள்தொகை பெருகப் பெருக எல்லாத் தொழிலாளர்க்கும் பிழைப்பு ஏற்பட்டதனாலும், பெரும் பாலும் பெற்றோர் தொழிலையே மக்கள் வழிவழி செய்து வருவாராயினர்.

ஊர்க்கிழவன் (ஊரன்), ஊராளி, ஊர்க்குடும்பன், ஊர்க் காமிண்டன் (கவுண்டன்), நாட்டாண்மைக்காரன்,நாடன்,நாடான், நாட்டான், பெரியதனக்காரன், அம்பலகாரன், சேர்வைகாரன், மூப்பன், மன்றாடி, பண்ணையாடி, முதலி, தலைவன், தேவன் என இடத்திற்கும் குலத்திற்கும் ஏற்பப் பல பெயர் பெற்றிருந்த ஊர்த்தலைவன் பதவி போன்றே, அரசர் பதவிகளும் தொல்வரவாகத் தொடர்ந்து வந்தன.

இயல்பான உறவன்பும் பொருளுதவியும் பாதுகாப்பும் நோக்கி, பொதுமக்கள் பெரும்பாலும் உறவினர்க்குள்ளேயே கொள்வனையுங் கொடுப்பனையுஞ் செய்து வந்தனர். அரசர்க்கோ எவ்வகை விலக்கும் தடையும் இருந்ததில்லை. வேளிர் மகளிரையும் மறக்குடி மகளிரையும் அயல்நாட்டரசர் மகளிரையும் அவர் மணந்து வந்தனர்.

எக்குலத்தாராயினும், துப்புரவும் ஒழுக்கமுமே உண்டாட்டுற விற்குக் கவனிக்கப்பட்டன. கல்வி, ஒழுக்கம், தவம், அதிகாரம், செல்வம், ஈகை, மறம், ஆற்றல் என்பவற்றா லன்றிப் பிறப்பாற் சிறப்பில்லை.

அத்தி, மத்தி, ஆதன், பூதன், உதியன், திதியன், கண்ணன், பண்ணன், காடன், கோடன், சாத்தன், கூத்தன், நாகன், பேகன், நன்னன், பொன்னன், நாணன், வாணன், வேந்தன், சேந்தன், நள்ளி, கிள்ளி, பாரி, காரி, பிட்டன், வட்டன், தத்தன், தித்தன், மூலன், வேலன், இறையன், பொறையன், மூவன், தேவன், கொற்றன்,