உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தமிழ் இலக்கிய வரலாறு வெற்றன், மருதன், விருதன், சேரன், கீரன், வங்கன், கொங்கன், வெள்ளையன், பிள்ளையன், கருப்பன், பொருப்பன், பச்சை, செச்சை, மலையன், கலையன், மாறன், வீறன், நல்லன், செல்லன், நம்பி, தம்பி, அப்பன், குப்பன், வேட்டன், சேட்டன் முதலியனவாகத் தனித்தும் புணர்ந்தும் அடையடுத்தும் வரும் பெயர்கள் எத்தொழிலா ருடையன வாயினும், இக்காலத்து வழங்கும் குலப்பட்டமின்றி, ஏனை னை நாட்டார் பெயர்கள் போன்றே அக்காலத்து வழங்கி வந்தன. வண்ணார், அடுத்தோர் (மயிர்வினைஞர்) முதலிய ஊர்க்குடி மக்கள், பறம்பர் (தோல்வினைஞர்) போன்றே, ஒரே வகுப்பாராய் எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தனர்.

மேனாடுகளிற் போன்றே, உணவுவகையினால் ஏற்றத் தாழ் வில்லாதிருந்தது.

எல்லாத் திருக்கோவில்களிலும் தமிழ் ஒன்றே வழிபாட்டு மொழியாயிருந்தது. உவச்சர், குருக்கள், திருக்கள், புலவர், பண்டாரியர், நம்பிமார், போற்றிமார், சாத்துவார் முதலிய தமிழ்ப் பூசாரியரே, சிவன் திருமால் காளி என்னும் முத் தெய்வக் கோவில்களிலும் வழிபாடு நடத்தி வந்தனர், கோவிற் புகவுரிமையும் வழிபாட்டுரிமையும் எல்லா வகுப்பார்க்குஞ் சமமாயிருந்தது. கோவிலையடுத்திருந்த திருக்குளத்திற் குளித்தபின் அல்லது கைகால் கழுவியபின், எல்லாரும் காணிக்கையொடு கோவிற்குட் புகுந்தனர்.

திருவிழாக்களிலும் புனலாட்டு விழாக்களிலும் எல்லா வகுப் பாரும் கலந்தே கொண்டாடினர். ஆறுகுளங்களில் வகுப்பிற் கோரிடமாக வரையறுக்கப்படவில்லை.

இடுகாடு எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தது. பிணத்தைச் சுடுவது தமிழர் வழக்கமன்று.

வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்பதே இயற்கை முறையாயினும், பொருளிலக்கண நூலார், ஆக்கவழிப்பாற்றல் பற்றியும் முக்கால அறிவுபற்றியும் முழுத்தூய்மைபற்றியும் அந்தணரை முன்னும், இறைவன்போல் எல்லாரையும் முறை செய்து காத்தல்பற்றி அரசரை இரண்டாவதும், நாட் நாட்டை வளம் படுத்தியும் போர்க்காலத்தில் அரசர்க்குப் பொருள் கொடுத்தும் உதவும் வணிகரை மூன்றாவதும் வைத்து, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனத் தலைகீழாகச் செயற்கை முறைப் படுத்தினர்.