உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

7. குமரிநாட்டு நாகரிகம்

27

நாகரிகம் என்பது திருந்திய பழக்கவழக்கம். அது முதன் முதல் நகரத்தில் அல்லது நகரியில் தோன்றினதனால் நாகரிகம் எனப்பட்டது.

ஒ.நோ:

L.civis=citizen, civil=polite, civil-civilize-civilization= advanced stage in social development.

L. urbis = city, urbane = courteous, urbanity = polished manners.

=

=

அகநாகரிகம், புறநாகரிகம் என நாகரிகம் இருவகைப் படும். அகநாகரிகமாவது திருந்திய ஒழுக்கம்; புறநாகரிக மாவது திருந்திய உலக வாழ்க்கை. இவற்றுள் முன்னது பண்பாடு என்றும், பின்னது அடையின்றிப் பொதுவாக நாகரிகம் என்றும் சொல்லப்படும்.

உறையுள்

நாகரிகம்

வேந்தரும் கோக்களும் மாபெருஞ்செல்வரும் வதியும் நகரங்களும், வேளிரும் மண்டிலத் தலைவரும் வதியும் நகர் களும், கல்லாலும் செங்கலாலும் சுண்ணாம்புக் காரையிட்டுக் கட்டிச் சிப்பி நீற்றுச் சுதையால் தீற்றிய, மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்டு, மாட்சியான காட்சியளித்தன.

சிப்பிச் சுதையின் வெண்மைச் சிறப்பை,

ce

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்”

என்னும் திருக்குறளாலும்,

(குறள். 714)

""

‘புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து

என்னும் புறநானூற்று அடியாலும்,

(புறம். 378)

"வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத் திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே. என்னுந் திருக்கோவைச் செய்யுளாலும் (15), அறியலாம்.

மாடங்களிலெல்லாம் கண்கவர் வண்ண வோவியங்கள்

தீட்டப்பட்டிருந்தன.