உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தமிழ் இலக்கிய வரலாறு

'சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்”

என்று மணிமேகலையும்,

என்று நன்னூற்பாயிரமும் கூறுதல் காண்க.

ce

‘மாடக்குச் சித்திரமும்'

நகரந்தொறும்

6

வானளாவும் எழுநிலைக்

(3: 127-131)

கோபுரமும்

கட்டப்பட்டிருந்தது. முதற்கண் அரசர்வதியும் அரண்மனைக் காவற் கோபுரமாக இருந்த கட்டடம், பிற்காலத்தில் வானளாவுந் திருக்கோவிற் கோபுரமாக வளர்ந்தது.

கோ = அரசன், புரம் = உயர்ந்த கட்டடம். "புரையுயர் வாகும்.’

(தொல், உரி. 4)

(கோநகருந் தலைநகரும் கோட்டை மதிலாலுஞ் சூழப் பட்டிருந்தன. கோட்டையுள்ள நகரங்கள் புரி என்றும், கோபுர முள்ள நகரங்கள் புரம் என்றும் பெயர் பெற்றன.)

புரிதல் = வளைதல். புரி

வளைந்த (சூழ்ந்த) கோட்டை

யுள்ளது. புரி - புரிசை = கோட்டை மதில்.

மதில், எயில், இஞ்சி, சோ என மதிலரண் நால்வகைப் பட்டிருந்தது. மிக உயரமானது மதில்; முற்றுகையிடும் பகைவர் மீது அம்பெய்யும் ஏவறைகளையுடையது எயில்; செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டியிறுகியது இஞ்சி; அரிய கடும் பொறிகளையுடையது சோ.

கோநகர்களில் அங்கண நீரைக் கண்ணிற் படாமற் போக்குவதற்கு, கரந்துபடையென்னும் புதைசாலகம் இருந் தது. அது மறுகு (பெருந்தெரு) நடுவிற் கட்டப்பட்டு யானைக் கூட்டம் மேற்செல்லும்படி, கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. அதிற் சென்றநீர் யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது.

அரசர் குடும்பத்துடன் போர்க்காலத்தில் தப்பிக்கொள் வதற்கு, அரண்மனையின் கீழும் கோநகர்களிடையும், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.