பக்கம்:பாவியக் கொத்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

பாலிருந்தது; பழமிருந்தது; அழுதாள்:-உள்ளப் பதைப்பிருந்தது; வாய் திறந்து அழுதாள்!

சேலிருந்தன போலிருந்தன விழிசள்-தன்குச்

சிவந்திருந்தன: மேலும் மேலும் அழுதாள்!

ஆலிருந்தது போலிருந்தது என்தோள்-முகத்தை

அதிற்புதைக்க வழியிருந்தது; அழுதாள்!

காலிருந்தது தலையிருந்தது அதன்மேல்-அவள்

கண்கள் வடித்த நீர்வழிந்தது; அழுதாள்!

(வேறு)

களிப்பாளென் றெதிர்பார்த்தேன்; காணேன் இன்பக்

காதலெனும் உணர்வுவெள்ளத் தவளும் வந்து, 220 குளிப்பாளென் றெதிர்பார்த்தேன்; குறியுங்காணேன்.

கூடலுக்கு முன் ஊடல் காட்டி, முத்தம் அளிப்பாளென் றெதிர்பார்த்தேன்; அதுவுங் காணேன்

அருகுநுனி விளக்கொளிக்கும் உடலைக் காட்டா தொளிப்பாளென் றெதிர்பார்த்தேன்; ஒன்றுங்காணேன்: ஒசிந்துவிட்ட மலர்க்கொடியாய்க் கால்வீழ்ந்தாளே!

வித்திடுவாள் வாழ்வுக்கென் றிருந்தேன், காணேன்;

விலக்குகின்ற கைவிலக்கி முகத்தைக் கையால், பொத்திடுவாள் என்றிருந்தேன். பொத்தக் காணேன்;

பொருதோளிற் பசுங்கிளியாய்த் தாவி வந்து 230 தொத்திடுவாள் என்றிருந்தேன்! தொத்தக் காணேன்! தொலைவறியாப் பேரின்பங் காட்டிக் காட்டி ஒத்திடுவாள் குளிர் முகத்தை என்றி ருந்தேன்!

ஒடிந்துவிழும் மலர்க்கொடியாய் அடிவீழ்ந் தாளே,