உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அரசனிடம் காளமேகத்தைப் பற்றிக் கோள் சொல்கிறான். அவன் சூழ்ச்சியில் அரசனும் வீழ்கிறான்.

ராஜ சபை கூடியிருக்கிறது. காளமேகம் வருகிறார். அவருக்கு ஒரு மரியாதையும் செய்யவில்லை; ஆசனமும் அளிக்கவில்லை. காளமேகம் சகலகலாவல்லியை மனம் கசிந்து வேண்டுகிறார். அரசனது சிம்மாசனம் வளர்ந்து இடந்தருகிறது. காளமேகம் கம்பீரமாக அதில் அமர்கிறார்

அதிமதுரத்திற்கும், காளமேகத்திற்கும் வாக்குவாதம். இருவரும் தத்தம் கவிதா சக்தியைக் காட்டுகின்றனர். பலத்த விவாதம்

‘உமக்கு அரிகண்டம் பாடத் தெரியுமா?’–அதிமதுரம்.

‘உமக்கு யமகண்டம் பாடத் தெரியுமா?’–காளமேகம்.

கடைசியாக, அந்தப் பயங்கரமான யமகண்டம் பாடத் தாமே முன்வருகிறார் காளமேகம்.

மறுநாள் திறந்த வெளி, ஆழமும், அகலமும் உள்ள நெருப்புக் குழி. அதன் நடுவில் பெரிய எண்ணெய்க் கொப்பறை. அதன்மேல் கட்டித்தொங்கும் உறியில் காளமேகம் இருக்கிறார். ஈட்டிகள் புணைத்த சங்கிலி யானையின் துதிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

யார் எவ்வித சமிக்ஞை கூறினும் உடனுக்குடன் பாடவேண்டும். இல்லையேல், யானை இழுக்க, ஈட்டிகளால் குத்தப்பட்டுக் கொப்பறையில் வீழ்ந்து மாள வேண்டும். இதுவே, அந்தக் கொடிய பயங்கரமான எமகண்டம்.

அரசன், பிரதானியா, புலவர், பொதுமக்கள் சூழ்ந்திருக்கின்றனர். அதிமதுரகவி உள்ளிட்ட புலவர்கள் சமிக்ஞை கொடுக்கின்றனர். அத்தனைக்கும் வெகு