பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 85 கடுஞ்சிறை வைத்துக் காவ லிடுங்கள்; என்றன் ஆணை இது"வெனக் கூறினன் “புல்லேந்து கையில் வில்லேந்து வோம்.யாம்” என்று பார்ப்பனர் இயம்பினர் “மகிழ்ச்சி” என்றான் மன்னன். “ஆயினும், மல்லேந்து மன்னர்க்குச் செல்வாக்கில்லையே! எப்படி அதுசெய ஏலும்?” என்றனர் அழகன் சிரித்தான் நன்றென மன்னன் இஞ்சி தின்ற குரங்குபோல் திகைத்தான் குந்தியே” இவ்வகை “கடல்மேற் குமிழிகள், காதலா ?கடமையா ?, பாரதிதாசன் கவிதைகள்-2'ஆகிய நூல்களில் காணப்பெறுகின்றது.

ஆசிரிய விருத்த வகைகள் ஆசிரிய விருத்தம்: அளவொத்த கழிநெடிலடி நான்கினால் வருவது. அளவொத்தலாவது- நாலடியில் எந்தச் சீர் எவ்வகைச் சீராக அமைந்துள்ளதோ, அந்தச்சீர் அவ்வகைச் சீராகவே எல்லா அடிகளிலும் அமைவது.

9. அறுசீர் விருத்தம்: பாவேந்தர் மூன்று வகையான விருத்தங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

அரையடிக்கு விளம் + மா + தேமா என வருவது. (எ-டு) இட்டதோர் தாமரைப்பூ

இதழ்விரிந் திருத்தல் போல வட்டமாய்ப் புறாக்கள் கூடி

இரையுனும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை, குத்தும் இல்லை; வேறுவே றிருந்த ருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும்

கண்மூடி வழக்கம் இல்லை”

14. கடல்மேற்குமிழிகள் (29) பக்கம் 66.69. பாரதியாரிடம் இவ்வகை இல்லை. 15. அழகின் சிரிப்பு - புறாக்கள் - 3