பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 87 இவ்வகை மிக அருகியே காணப்படுகின்றது. புகழ் மலர்கள் என்ற நூலில் காணலாம்.”

10. எழுசீர் விருத்தம்: இவ்வகை பாவேந்தரிடம் மிகக் குறைவாகவே உள்ளது.

விளம் + மா + விளம் + மா + இரண்டு விளம் + மா என

வருவது.

(எ-டு) எண்ணமும் சொல்லும் இரண்டிலா வாழ்க்கை

எழுதரும் தொழிலியல் அறிவு உண்மையின் உழைப்பு திண்ணிய பொறுமை

ஒவ்வொரு நாளுமே உலகம் ஒண்மைகொள் புதுமை உண்டிடும் பழம்காய்

உயர்ச்சிசேர் பயிர்கள் யாவும் துண்மைசார் தன்றன் அறிவியல் மக்கள்

நுகர்ந்திட அளிக்கும்ஒர் அறிஞன்.” இவ்வகையைப் பாவேந்தரின் “பொங்கல் வாழ்த்துக் குவியல், புகழ் மலர்கள்” ஆகியவற்றில் காணலாம். இவ்விலக்கணத்திற் சிறிது சிதைந்த எழுசீர் விருத்தங்கள் “பன்மணித்திரள்,நாள் மலர்கள், புகழ் மலர்கள்” ஆகிய நூல்களில் காணலாம்’

11. எண்சீர் விருத்தம்: பாவேந்தரிடம் இரண்டு வகையான எண்சீர் விருத்தங்களே மிகுதியாகக் காணப்பெறுகின்றன.

அரையடிக்கு இரண்டு காய் + மா + தேமா என வருவது.

(எ-டு) சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;

திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்

20. பாரதியார் மற்ற அறுசீர் விருத்த வகைகளினும் இதனைக் குறைவாகவே பாடியுள்ளார். ஆனால், பாவேந்தரை விடச் சற்று அதிகமாகவே பாடியுள்ளார்.

21. புகழ் மலர்கள்- ஜி.டி.நாயுடு- 2

22. பாரதியார் இவ்வகையில் எழுதிய அனைத்துப் பாடல்களும் இந்த

இலக்கணத்திற்குச் சிதையாமல் அமைந்துள்ளன.