பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாவேந்தரின் பாட்டுத்திறன்

புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள், விளைந்த நன்செப் திறத்தினிலே என்விழியை நிறுத்தி னாள்;ளன்

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்’

“பாரதிதாசன் கவிதைகள் - 1, 2, 3, 4, எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, காதல் தினைவுகள். எது இசை ? முல்லைக் காடு, தமிழச்சியின் கத்தி, பொங்கல் வாழ்த்துக் குவியல், குறிஞ்சித் திட்டு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பன்மணித்திரள், குயில் பாடல்கள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது, தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள், புகழ் மலர்கள். வேங்கையே எழுக” ஆகிய நூல்களில இவ்வகையைக் காணலாம். பாவேந்தர் நூல்களில் பரவலாகவும் மிகுதியாகவும் கையாளப் பெற்றுள்ள எண்சீர் விருத்தவகை இதுவே.”

அரையடிக்கு மூன்று காய் + மா என வருவது. (எ-டு. தாட்டினிலே குடியரசு நாட்டிவிட்டோம் இந்நாள்

நல்லபல சட்டங்கள் அமைந்திருந்தல் வேண்டும் காட்டோமே சாதிமணம் கலப்புமணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி கட்டாயக் கல்வி ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே,

உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்; கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே சாதி,

கீழ்மேல்என்றுரைப்பவர்கள் வாழுவது சிறையே’

“பாரதிதாசன் கவிதைகள் - 1, 2, காதல் நினைவுகள், கடல்மேற் குமிழிகள், குடும்ப விளக்கு பொங்கல் வாழ்த்துக் குவியல், குறிஞ்சித் திட்டு, பன்மணித்திரள், தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள், வேங்கையே எழுக"முதலிய நூல்களில் இவ்வகையைக் காணலாம்.”

23. அழகின் சிரிப்பு - அழகு 2

24. பாரதியாரிடமும் இவ்வகை உண்டு. 25. கடல்மேற்குமிழிகள் - 38. பக்கம் 90 25. பாரதியார் படைப்புகளில் இவ்வகை மிகவும் அருகியே காணப்படுகின்றது.