பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பு நெறி x 101 இது கடவுள் வணக்கப் பாடல். இதில் நொண்டிசீர்கள் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. நடிப்பதற்கே என்று எழுந்தமையால் நொண்டிச் சீர்கள் தெளிவாக அமைக்கப் பெற்றுள்ளன.

பாரதியாரின் நொண்டிச் சிந்துகள் அனைத்தும் ஒர் எதுகை பெற்ற நான்கடியால் அமைந்துள்ளன. பாவேந்தரும் பாரதியாரைப் பின்பற்றி நான்கடிகளால் தம் பாடல்களை அமைத்துள்ளார். (எ-டு) கவிஞன்.இவ்வாறுரைத் தான் - புவி

காப்பவன் இடியெனக் கனன்னுரைப்பான்; குவிந்தஉன் உடற்சதை யைப் - பல

கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன் தவந்தனில் ஈன்றளன் பெண் - மனம்

தாங்குவ தில்லை.எனில் கவலையில்லை! நவிலும்உன் பெரும்பிழைக் கே - தக்க

ராசதண் டனையுண்டு மாற்றமுண்டோ!’ பாவேந்தரின் “கதர் இராட்டினப் பாட்டு, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு, பாரதிதாசன் கவிதைகள் - 1, 3 ஆகிய நூல்களில் இவ்வகையைக் காணலாம்.

26. வளையற் சிந்து வளையல் விற்றுச் செல்வோர் பாடுவதாக உருவாகிய ஒரு வகைச் சிந்து இது. பின்னர்ப் பல பொருளிலும் பாடப் பெற்றது. இதற்கெனத் தனி வடிவம் உண்டு. (எ-டு) பால்துரைபோல் பாரதத்தில் பஞ்சுவிளைப்பீரே-நல்ல

பஞ்சுவிளைப் பீரே - அந்தப் பஞ்சுதனைச் சுத்திசெய்வீர் பனிமலைபோல் நீரே தேனருந்தும் ஈக்களெல்லாம் சேர்ந்து

மொய்த்தல் போலே - மிகச்சேர்ந்து மொய்த்தல் போலே - முழுத் தேசமின்று ராட்டினத்தைச் சேர்ந்து சுற்று வீரே’ பாவேந்தர் கதர் இராட்டினப் பாட்டில் இவ்வகை உள்ளது.”

54. பாதா.கவிதைகள் - தொகுதி 1. புரட்சிக்கவி- பக்கம் 28 55. கதர் இராட்டினப் பாட்டு 56. பாரதியாரிடம் இவ்வகை இல்லை.