பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 105

இந்த நூலில் பல்வேறு வகைத் தென்பாங்குப் பாடல்களை வானவில்லில் காணும் வண்ணம்போல், பன்னிறம்காட்டியில் காணும் வகைவகையான வண்ணப்படங்கள்போல் கண்டு மகிழ முடிகின்றது. இவை தவிர, “கதர் இராட்டினப் பாட்டு, காதல் நினைவுகள், முல்லைக்காடு, பொங்கல் வாழ்த்துக் குவியல், தேனருவி, பா.தா. கவிதைகள் - 4. தமிழுக்கு அமுதென்று பேர். வேங்கையே எழுக” ஆசிய நூல்களிலும் இத்தென்பாங்குகளைக் காணலாம்.”

30. இலாவணி: “கேட்போர் நெஞ்சைக் கவரும் இவ்வகைப் பாடல்கள் மராட்டிய நாட்டில் உருவாகியது; மராட்டிய மன்னர் சரபோசியின் ஆட்சியில் தஞ்சையில் வளர்ச்சி பெற்றது. பெரும்பாலும் காமன் பண்டிகைகளில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரு புலவர்களால் “டேப்’ என்னும் ஒருவகைத் தோற்கருவி அடித்துப் பாடப்பெறும். பாடலிலும் வினாவும் விடையுமாக இருப்பது வழக்கம். இதுவும் சிந்துப் பாடல் வகைகளில் ஒன்றாகும். இலாவணிகள் தனி அமைப்புடையவை. (எ-டு.)ஆர்த்திடும் நந்தும்கொம்பும் ஆர்த்தே அகழ் அழிக்கச்

சேர்ந்த உழிஞைப் படை சீறுமே சிறுமே! - மேல் பாய்ந்தது நொச்சிப்படை பாய்ந்துபகைத் திறத்தைப்

பஞ்சாப்ப் பறக்கமறந்து மீறுமே மீறுமே”

இதில் தனிச்சொல் மிகையானது. அதை விலக்கிப் பாடினால் தான் தாளத்தில் அடங்கும். இல்லையேல் சொற்களை நெருக்கித் திணித்துப் பாடவேண்டியிருக்கும், இசையில் அழகு இருக்காது. பாவேந்தரின் தேனருவியில் ஒர் இலாவணி மட்டும் அத்திபூத்த மாதிரி அரிதாய்க் காணப்படுகின்றது”

31. இரண்டடிச் சிந்துகள் சிந்துவுக்கு உரிய அடியளவு இரண்டு என்பது இலக்கணம். இத்தகைய சிந்துகளை இரண்டடியால் மட்டும் இன்றி நான்கடியாலும் இயற்றும் மரபைப் புதுமைக் கவிஞர்

54. பாரதியாரிடம் இவ்வகையைக் காண முடியவில்லை. 65. தேனருவி - பாடல் 67 பக்கம் 80 66. பாரதியாரிடம் இவ்வகை இல்லை.