பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 பாவேந்தரின் பாட்டுத்திறன்

பாரதியாரிடமும், புதுவைக் கவிஞர் பாரதிதாசனிடமும் காணலாம். பாவேந்தர் இரண்டடிச் சிந்துகளைவிட நான்கடிச் சிந்துகளையே அதிகமாக இயற்றியுள்ளார்.

tா-டு. பொற்புடை முல்லைக்கொத்தில்

புளியம்பூ பூத்ததென்றால் சொற்படி யார்நம்புவார் - சகியே

சொற்படி யார்நம்புவார்? (12)

ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை

ஒப்பக் கருதக் கொள்ளுங்கால் இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே இருசாதி மாந்தர்க்குண்டோ? (68)” பாவேந்தரின் “கதர் இராட்டினப் பாட்டு, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, முல்லைக்காடு, பா.தா.க. 2, 3, 4, இசையமுது - 2, இளைஞர் இலக்கியம், பன்மணித் திரள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது. தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள், வேங்கையே எழுக” ஆகிய நூல்களில் இரண்டடிச் சிந்துகள் உள்ளன.”

32. உருப்படி எடுப்பு முடிப்புகளுடன்: உருப்படி என்பது சீர்த்தனை. சிந்துப் பாடலின் வளர்ச்சி வடிவமே இது. சிந்து, உருப்படி இவற்றிடையே உள்ள ஒற்றுமைகளைப் போல சில வேற்றுமைகளும் உள்ளன என்பதை எடுத்துக் காட்டுவார் டாக்டர் இரா. திருமுருகன்.”

அவை:

ஒற்றுமைகள்: (1) சிந்துப்பாடல்களும் உருப்படிகளும் தாள அமைப்புடையன; (2) இரண்டடிக் கண்ணிகளாக அமைவன; (3) எதுகை மோனைகளுடன் இயைபும் முடுகியலும் இடம் பெறக் கூடியவை, (4) தனிச் சொற்கள் உண்டு.

67. பாதா.கவிதைகள்-3 சமத்துவப் பாட்டு 68. பாரதியாரிடம் இவ்வகைச் சிந்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 59. பாவேந்தர் வழியா? பாரதி வழியா? - பக்கம் 44