பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாவேந்தரின் பாட்டுத்திறன்

5

அமுதென்று பேர், நாள் மலர்கள், புகழ் மலர்கள், வேங்கையே எழுக ஆகிய நூல்களில் காணலாம். தியாகராசரின் சில தெலுங்கு உருப்படிகளையும் மொழி பெயர்த்துள்ளார்.”

34. வெண்டளைக் கண்ணிகள்:

(எ-டு. தமிழ்நாடென் தாய்நாடு

தாய்மொழிதான் என்றன் தமிழென் றுணரான்

சழக்கனன்றோ என்தாயே!”

இதுபோல வெண்டளை பெற்ற இரண்டிரண்டடியாகப் பொருள் முடியுமாறு ஒரெதுகையுடன் வருவது “கண்ணி” எனப்படும். பொருள் முடிவுள்ளவை"என் தாயே என்பது போன்ற ஒரே சொல்லால் முடிந்து அச்சொல்லால் பெயர்பெறும். அப்படியின்றிப் பொருள் தொடர்ந்து செல்வதும் உண்டு. இறுதியில் வெண்பாப்போல் சிந்தடி வந்து நாள், மலர், காசு, பிறப்பு என்று முடிந்தால் இதையே “கலிவெண்பா’ எனலாம். ஈற்றடி மட்டுமே கலிவெண்பாவுக்கும் வெண்டளைக் கண்ணிகளுக்கும் வேறுபாடு.

இந்த வகைக் கண்ணிகள் பாவேந்தரின் பாதா.கவிதைகள் - 1, குடும்ப விளக்கு, பொங்கல் வாழ்த்துக் குவியல், தேனருவி, பன்மணித்திரள், தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள், வேங்கையே எழுக” ஆகிய நூல்களில் உள்ளன. -

35. ஏற்றப்பாட்டு: பெரும்பாலும் மா+தேமா+தேமா என்னும் சிந்தடிகளால் இரண்டிரண்டு அடிகள் எதுகையோ, மோனையோ பெற்று அமைந்திருக்கும்.இடைச்சீர் ஒருநிரையசைச்சீராகவும் வரும். (எ-டு) கெண்டை விழி யாளே - அடி

கிள்ளை மொழி யாளே கொண்டை யிலே பூவும் - உன் கோணை நெடுவாக்கும்

71. பாரதியாரிடமும் இவ்வகை மிகக் குறைவாகவே உள்ளது. 72. பன்மணித்திரள் - என் தாயே என் கண்ணி