பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி 109

தண்டையிலே பாட்டும் - உன்

தாழ்அடியில் கூத்தும் கண்டவுடன் காதல் - நான்

கொண்டேன் உன்மீதில்’

ஏற்றத்தால் பயிர்கட்கு நீர் இறைத்த காலத்தில் இறைத்த சால் கணக்கை எண்ணிக்கொண்டே பாடுவது உழவர்களின் வழக்கம். பாவேந்தர் ஏற்றப்பாட்டே இயற்றியுள்ளார். “பாரதிதாசன் கவிதைகள் - தொகுதி 3 இல் (பக்.151) இதனைக் காணலாம்.’

36. ஆசிரியத் தாழிசை: மூன்றடி ஒர் எதுகை பெற்று வந்தனவாக நான்கு பாடல்கள் பன்மணித்திரளில் காணப்படுகின்றன. இவை எந்தப் பாவகையிலும் அடங்கவில்லை. ஒருபுடை ஒப்புமை நோக்கி இவற்றை ஆசிரியத் தாழிசையில் அடக்கலாம்.

(எ-டு) செந்தமிழ் காத்தான் திருக்குறளில் ஆர்வத்தான்

இந்தி சுமக்கின்றான் தில்லிர் கிளிக்கின்றான். இந்தாடி தோழி இவனா தமிழ் மறவன்?

இதுகாறும் காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுகளால் பாவேந்தர் பழைய மரபை அதிகம் போற்றுவோராகத் தெரிகின்றது. பாவேந்தரின்

முழு நூல்களை நோக்கினால் அவை பழைய பாவகைகளால் ஆனவை என்பது தெளிவாகும்.

“பாண்டியன் பரிசு” முழுவதும் எண்சீர் விருத்தத்தால் இயன்றது.

“இருண்ட வீடு’ நேரிசையாசிரியப்பாவால் நிகழ்வது.

73. ஏற்றப்பாட்டு பாதா.கவிதைகள் - 5 பக்கம் 159 74. பாரதியார் ஏற்ற நீர்ப்பாட்டின் இசையில் நெஞ்சைப் பறி கொடுக்கக்

கூறுகின்றார் (குயில் பாட்டு-அடி 35). ஆனால் ஏற்றப்பாட்டு இயற்றவில்லை. 75. பன்மணித்திரள் - 19