பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாவேந்தரின் பாட்டுத்திறன்

அநுபவித்தும் பொருள்களிடையே இவ்வொப்புமையைக் காணவும் நேரிடும். பொருள்களிடையே காணப்பெறும் இவ்வொப்புமையைக் கவிஞன் கண்ணால் கண்டும், காதால் கேட்டும், அறிவால் நுணுகி அறிந்தும், வாழ்க்கையில் நேராக அநுபவித்தும் அறிந்து கூறுகின்றான். இவ்வாறு கவிஞன் ஒப்பு நோக்கும் முயற்சி கவிதையைச் சிறப்புடையதாக்குகின்றது.

ஒப்புமை காணும் ஆற்றல் சிறு குழந்தையிடம் அமைந்து கிடக்கின்றது. அங்ஙனமே ஆதி மனிதனும், ஆதிக் கவிஞனும் உவமையைக் கையாண்டனர். உவமையணி இல்லாத சிறந்த கவிதையே இல்லை எனலாம். ஏனைய அணிகள் யாவும் மறைந்து உவமை மட்டிலும் எஞ்சி நின்றாலும் கவிதை சிறப்புடன் திகழும். தொல்காப்பியனார் இவ்வுமையை நான்காகப் பாகுபாடு செய்துள்ளார். “வினை. பயன், மெய், உரு என்ற நான்கும்பற்றி உவமை கூறப்பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவை புலியன்ன மறவன் (வினை), “மாரியன்ன வண்கை’ (பயன்),"துடியன இடை” (மெய்),"பொன்போல் மேனி” (உருது என்ற எடுத்துக்காட்டுகளால் தெளிவாகும். இவை எல்லாவற்றிலும் ஒர் இயல்பு மட்டிலும் பொதுவாக அமைந்துள்ளது என்பது வெளிப்படை

கவிதையில் உவமையாக வரும் பொருள் சிறப்புடையதாகவும், உயர்ந்த கருத்தைத் தருவதாகவும் இருத்தல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனார்,

“உயர்ந்ததன் மேற்றே

உள்ளுங்காலை” என்று வரையறுத்துள்ளது ஈண்டு நினைத்தல் தகும். எக்காரணத்தாலும் உயர்ந்த பொருளைத் தாழ்ந்த பொருளோடு உவமித்தல் ஆகாது. மேலும், உவமேயப் பொருள் முழுதும் ஒத்திருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை; ஏதாவது ஒரு பகுதி மட்டிலும் ஒத்திருந்தால் போதுமானது. உலக வழக்கில் இழிந்ததெனக் கருதப்பெறும் பொருளை உவமையாக எடுத்தாள வேண்டிய சந்தர்ப்பம்

2. தொல். பொருள் - உவமையில் - 3