பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் Y 139 பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே யாகுதல்’ கண்டு, அந்நலங்களை எடுத்தோதுதலை விடுத்து, இளஞ்சிறார்கள் செய்யும் இன்பச் சிறுதொழில்களையே கண்டு எடுத்தோத விழைந்தான். விழைந்தவன்,

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே” என்று கூறி மகிழ்கின்றனன். இங்ஙனமே நம் கவிஞர் பெருமான் குழந்தையை வருணிக்கும் பாங்கில் அதன் மதலைச் சிரிப்பில் தம் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றார். -

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ? குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற

ஒளிஇமை விளக்கி வெளிப்படும் கண்ணால் முதுவை யத்தின் புதுமை கண்டிதோ? என்னவோ அதனை எவர்தாம் அறிவார்? தங்க மாதுளைச் செங்கனி பிளந்த மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு?!

வாரீர் அனைத்து மகிழவேண் டாமோ! பாரீர் அள்ளிப் பருகமாட்டோமோ? செம்பவ ளத்துச் சிமிழ்சாய்ந்த அமிழ்தாய்ச் சிரித்தது; பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே!”

12. அகம் . 96 13. புறம் - 188 14. பாதா.க. தொகுதி-2-48 (பக்கம்124)