பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாவேந்தரின் பாட்டுத்திறன்

அற்புதமான வருணனை. பனை மரமும் அதன் பயனும் பாங்குறுக் காட்டப்பெறுகின்றன.

இங்ஙனமே கவிஞர் காட்டும் “சோலை ஆடலரங்கும்” (குயில் பாடல்கள் பக்கம் 7, அற்புதமான வருணனையாக அமைகின்றது. இங்கு விட்டுவிட்டுக் குழல் ஊத மெட்டு வைத்து குயில் பாட மயில் ஆடுகிறது: மாங்கொத்தி தாளங்கள் போடுகிறது. குளக்கரையில் அவை மோதுவது காதிற்கு இனிமைதரும் மேளமாகிறது. தாமரை வண்டு ஒத்துதுகின்றது. சிட்டு சலங்கை போடுகிறது. பெடை அன்னம் நடனமாடுகிறது. கிள்ளை ஒழுங்குடன் பேசிக்கொண்டிருக்கும். இச்சோலையில் கொடி முல்லை கோத்த முத்தும் இணையில்லாத மங்கையொருத்தி கள்ளொழுகும் உதடுகாட்டிச் சிரிக்கின்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டிருந்தது ஒரு செம்பருத்தி!

காதல் பற்றியவை: ஆணும் பெண்ணும் இணைவதற்கு இறைவனால் (இயற்கையால்) வழங்கப்பட்டது காதல் உணர்வு. அவ்வுணர்வைக், கவிஞர் வருணிப்பர். விதவிதமாக. சிலவற்றை ஈண்டுத் தருவேன்.

(1) பாலனைப் பழித்தல்: தான் பெற்ற பிள்ளையை இகழ்ந்து பேசுதல் என்பது இதன் பொருள். இது காதல் இலக்கியத்தில் ஒரு ‘துறை'யாக அமர்ந்து கொண்டது.

அரும்பால கா:முனம் பூமனம்;

சொற்பொருள்; ஆகம் உயிர்; கரும்பாம் சுவை; எள்ளும் எண்ணெயும்

போலொத்த காதலரைப் பெரும்பாலின் நல்லன்னம் கங்கா சலத்தைப் பிரிப்பது போல கரும்பாம் புலவர் யமன்ஆலை

செக்கெனத் தோன்றினையே’ என்பது இத்துறை பற்றிய பாடல். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடியது.

28. தனிப்பு:டில் திரட்டு முதற்பகுதி- செய். 44