பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாவேந்தரின் பாட்டுத்திறன்

(திருவா. 544) என்று கூறிக் கொள்ளுகின்றார். மங்கையர் மனம் இளகியது. இதனை ஒரு காதலன் ஒரு மங்கையை இருப்பினும் பொல்லாத நெஞ்சினள்’ என்கின்றான். அவனை அவள் விரும்பவில்லை என்பதை அறியாதவன். ஒருதலைக் காமன் தனக்குத்தானே அவளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே எங்குகின்றான். இவனது நிலையை - இவன் மனத்தில் வதியும் மங்கையை இவன் வாக்காக வருணிக்கின்றார் பாவேந்தர் - ஐந்து கட்டளைக் கலித்துறைப் பாக்களால்.

இழையினும் மெல்லிடை யாள்;கயற்

கண்ணினாள்; ஏற்றிடுசெங் கழையிலும் இன்மொழி யாள்,வாளைக்

காதினாள்; காரிருள்செய் மழையினும் கன்னங் கருங்குழலால்

என்மனம் நலிந்து துழையினும் ஏற்காத நெஞ்சினாள்!

என்ன துவலுவதே?

பஞ்சினும் மெல்லடி யாள்,பசுத்

தோகையின் சாயலினாள்; நஞ்சினும் கொல்லும் விழியுடை

யாள்;ஒரு நன்னிலவின் பிஞ்சினும் ஒண்மைசேர் நெற்றியி

னாள்;அவன் பின்நடந்து கெஞ்சினும் ஏற்காத நெஞ்சினாள்!

என்ன கிளத்துவதே?

முத்தினும் முல்லை அரும்பினும்

ஒள்ளிய மூரலினாள்;

31. காதல் பாடல்கள் - பக்கம் 74. இத்தலைப்பிலுள்ள பாடல்கள் சரியாகப் பதிப்பிக்கப்பெறவில்லை.அரசு உரிமையானபிறகு தக்க குழு ஒன்று அமைத்து பாவேந்தர் நூல்களை ஐந்து அல்லது ஆறு தொகுதிகளாக வெளிவருதல் மிகவும் இன்றியமையாதது. ஆனால், பூனைக்கு மணிகட்டுவது யார் ? என்பதுதான் தெரியவில்லை.