உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாவேந்தரின் பாட்டுத்திறன் இயல் - 8

பாடல்களில் படிமங்கள்

இயற்கைப் பொருள்கள் இன்பமயமான அமைதியில் அடங்கிக் கிடக்கின்றன. இந்த அமைதி நிலையில் கலந்து கொள்ளும் இயல்புடையவனே கவிஞன். கவிஞன் அந்த இன்பகரமான அமைதி நிலை கெடாமல் இயற்கையைத் தழுவுவான். தன்னையும் உடனே மறந்து விடுவான். அந்த இன்பப் பெருக்கில் அவன் மிதப்பான். அதிலிருந்து வெளிப்போந்தவுடன் இன்ப வெறி பிடித்தவன்போல் சில சமயம் பாடுவான்; சில சமயம் ஆடுவான். இவையெல்லாம் கலைகளாகின்றன. இந்தக் கலைகளில்தாம் நாமும் ஆழங்கால் பட்டு நம்மையும் மறக்கின்றோம். இதுவே முருகிய நிலை. இதுவே உலகத்திற்கு மூலமாய் நிற்கும் இன்பப் பெருக்கில் ஒன்றுபட்டு வாழ்வதாகும். இதுவே நம்மை உயர்த்தும்; நம்மை அறியாமல் நமது உள்ளம் தேடித்திரியும் நிலையும் இதுவேயாகும்.

பாவேந்தரின் பாடல்களைப் படித்து அநுபவிக்கும்போது இத்தகைய ஒர் அதுபவ நிலை நம்மிடம் எழுவதை உணரலாம். இயற்கையையும் பிறவற்றையும் அவர் அநுபவித்ததைப் போலவே அவர்தம் கவிதைகளின்மூலம் நம் புலன்களின் துணைகொண்டு நாமும் அநுபவிக்கலாம். கவிஞன் தன் அநுபவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் உணர்வூட்டி நமக்குத்தருகின்றான். படிமங்கள் (Images), சிந்தனை இவற்றின் குறியீடுகளாகச் (Symbol) சொற்கள் பணி புரிகின்றன என்பதை நாம் அறிவோம். பர்ட்டன்’ என்ற திறனாய்வாளரின் கருத்துப்படிகவிதையின் படிமம் சொற்களின் மூலம் நம் புலன்களைத் தொடுகின்றது. புலன்களின் மூலம் படிப்போரின் உணர்ச்சிகளும் அறிவும் விரைவாகத் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாகக் கவிதையில் படிமம் அதிகமாகப் பயன்படுகின்றது.” 1. இக்கட்டுரை ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு (மதுரை) 1981 விழா மலரில்

“பாரதிதாசனின் முருகியல் நோக்கு” என்ற தலைப்பில் வெளிவந்தது.

2. Burton, N. The Criticism of Poetry (Longmans and Green r Co. Ltd.,

London) - Page 97