பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 165

என்னும் அடிகளில் மூடத்தனத்தின் முடைநாற்றம் நம் மூக்கில் துளைப்பதையும், கர்ப்பூரத்தின் நறுமணம்துகரும் நிலையிலும் அழகிய பெண் குழந்தையைக் காண்கின்றோம்.

“குப்பை மனக்க குடித்தெருவெல் லாம்மணக்க அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனோ?”

“நகைமுகத்தை மலர்பெய்த நன்னி ராட்டிக் குறைவற நறும்புகை குழலுக் கூட்டி மனக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி “ஓவியப் பாயின் மீதில் உட்கார்ந்தோர் மின்இயக்கத் துனிசி றிக்காற்றோடு சூழ்பன்னீர் மணமும் பெற்றார்” என்ற பாடற் பகுதிகளில் நாற்றப்புவப் படிமங்களைக் கண்டு தெளியலாம்.

தொடுபுலப் (நொப்புலப் படிமங்கள்: தொடுவதால் உணரக் கூடிய படிமங்கள் இவை. இந்த நுண்ணிய படிமங்கள் பாவேந்தர் பாடல்களில் அத்திப் பூவினும் அரியவை. தேடிக் கண்டு மகிழ்வோம்.

“அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே” அள்ளி அனைத்திட வேண்டிய பெண் குழந்தைக் காட்சியில் அன்னத்தின் தூவி, அனிச்ச மலர் இவற்றின் மென்மையையும் உணர்கின்றோம்.

  • g

திடுக்கென்று கண்விழித்தேன் என்தோள் மீது

செங்காந்தள் மலர்போலும் அவள்கை கண்டேன்.” என்னும் அடிகளில் தொடுபுலப்படிமம் தென்படுகின்றது. செங்காந்தள் மலரில் இது காட்டப்பெறுகின்றது.

27. இசையமுது- தாலாட்டு - பக்கம் 55 28. குடும்ப விளக்கு- மூன்றாம் பகுதி. மணவாழ்த்தும் வழியனுப்பும்- பக்கம் 120 29. குடும்ப விளக்கு-நான்காம் பகுதி மக்கட்பேறு-பக்கம் 151 30. பா.க.முதல் தொகுதி. 42 பெண்குழந்தைத் தாலாட்டு- பக்கம் 127 31. பா.க. இரண்டாம் தொகுதி - 15 மெய்யன்பு பக்கம் 57