பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

“உன் அரும் உருவம் காணேன்

ஆயினும் உன்றன் ஒவ்வோர் பின்னதல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்!” என்ற பாடற் பகுதியில் தென்றல் என்னும் மெல்லிய பூங்காற்று நம் உடவைத் தொட்டுப் போவது போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம். இயக்கப்புலப் படிமங்கள்: பாடல்களைப் பயிலும்போது பொருள்கள் நகர்வன போன்ற ஒருவித உணர்வைத் தருவன இயக்கப்புலப் படிமங்கள். பாவேந்தரின் பாடல்களில் பல இடங்களில் இவற்றைக் கண்டு மகிழலாம்.

“படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து

பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணிர் வெள்ளம் அடிகோர்தல் கண்டார்கள் அங்கிருந் தோர்” அமுதவல்லியின் கண்ணிர் வெள்ளம் அவள் உடலெல்லாம் பாய்ந்து அவள் காலடி வரையில் ஒழுகிவருவதைக் கண்டு நெகிழலாம். இதில் இயக்கப்புலப் படிமத்தை உணர்கின்றோம் அன்றோ ?

“aாளெயிற்று வேங்கையெலாம் வால்சுழற்றிப் பாயவரும்

காடு - பள்ளம்! மேடு!” இதில் வால்சுழற்றிப் பாயவரும் என்பதில் வேங்கையின் இயக்கத்தை நாம் உணர்வதை அறியலாம்.

“கீச்சென்று கத்தி - அணில் கிளையொன்றில் ஒடிப் - பின் வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை வெடுக்கென்று தான்க டிக்கும்.

32. அழகின் சிப்பு தென்றல் பக்கம்7 33. பா.க. முதல் தொகுதி-2 புரட்சிக்கவி பக்கம் 35 34. பா.க. முதல் தொகுதி- 7. காடு - பக்கம் 57