பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 167

ஆச்சென்று சொல்லி - ஆண் அணைக்க நெருங்கும் - உடன் பாய்ச்சிய அம்பெனக் கீழ்த்தரை நோக்கிப் பறத்திடும் பெட்டை அணில்:

மூச்சுடன் ஆனோ - அதன்

முதுகிற் குதிக்கும் - கொல்லர் காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக் கலந்திடும் இன்பத்திலே!”

அணிலின் ஆணும் பெண்ணும் அங்கும் இங்கும் ஒடி இறுதியில் இன்பக் கலவியில் ஆழங்கால் படுவதில் இயக்கப்புலப் படிவங்கள் நம்மை மகிழ்வூட்டுகின்றன.

நள்ளிரவில் அமைதியிலே மனிவிளக்கும்

நடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல் மெள்ளஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்

விணைஇல்லை காதினிலே இனிமை சேர்க்கும்.” இப்பகுதியில் தென்னாடு பெற்ற செல்வத் தென்றலின் இயக்கம் தெள்ளிதின் புலனாகின்றது. இயக்கப் படிமத்தில் நம் உடலும் தைவாப் பெறுதல் போன்ற உணர்ச்சியால் யூரிக்கின்றோம். அன்னையின் அன்பினைக் கண்ணில் காணாமல் அவள் தம் செயலில் காண்பதுபோல, உருவம் காணப்பெறாத தென்றலின் ஒவ்வொரு சின்னநல் அசைவிலும் நம்மைச் சிலிர்த்திடச் செய்யும் செயல்களைக் கண்டு பரவசப்படுகின்றோம்.

“பெண்கள்

விலக்காத உடையை நீபோய்

விலக்கினும் விலக்கார்” உன்னை’ என்னும் பாடற்பகுதியில் தென்றலின் குறும்பைக் காட்டி இயக்கப்புலப் படிவத்தை அநுபவிக்கச் செய்கின்றார் கவிஞர் பெருமான். விலக்காத விலக்கினும் விலக்கார் - இவை இயக்கப்புலப் படிமங்கள்.

35. பா.க.முதல் தொகுதி 91 மக்கள் நிலை அணில்- பக்கம் 61 36. குடும்ப விளக்கு- ஒருநாள் நிகழ்ச்சி - பக்கம் 32 37. அழகின் சிரிப்பு- தென்றல் - பக்கம் 7