பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 169

“தாப்இரை தின்ற பின்பு

தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு

தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கை; தாய்அருந்தியதைக் கக்கித்

தன்குஞ்சின் குடல்நிரப்பும்; ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!

அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்” என்னும் பாடற்பகுதியிலும் பல இயக்கப்புலப் படிமங்களில் ஆழங்கால் படுகின்றோம்.

“கட்டுக்குள் அடங்கா தாடிக்

களித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள்” என்னும் பாடற்பகுதியில் “குறுகுறு” என்று கொஞ்சு நடை பயிலும் சிறார்களின் நடைகாட்டப் பெறுகின்றது. “சிட்டுக்கள்” என்னும் சொற்படத்தில் சிறார்களையும் காண்கின்றோம்; கோழி, புறா இவற்றின் பார்ப்புகளையும் பார்க்கின்றோம்.எல்லாம் மனக்கண்ணால் தான் !

“குறிப்பறி யாமல் நீவிர் குண்டானிற் கவிழ்ந்த நீர்போல் கொட்டாதீர்” என்றான்” (பொன்முடி) குண்டான் கவிழும்போது அதில் சிறிதும் நீர் இருப்பதில்லை. அதுபோலப் பண்டாரம் சிறிதும் எஞ்சாமல் பொன்முடியின் “காதல் மறை”யை, அம்பலத்தில் அவிழ்த்து விடுகின்றான். நீர் கொட்டும் காட்சியில் இயக்கப்புலப் படிமம் பளிச்சிடுவதைப் பார்க்கின்றோம்.

இந்த வகைப் படிமத்திற்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல்,

40. அழகின் சிரிப்பு- பக்கம் 40 41. குடும்ப விளக்கு - ஒருநாள் நிகழ்ச்சி- பக்கம் 27 42. எதிர்பாராத முத்தம்- நுணுக்கம் அறியாச் சணப்பன் - பக்கம் 30