உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பாவேந்தரின் பாட்டுத்திறன்

சங்ககாலத்திற்குப் பிறகு காவியகாலத்திலும் பக்தி இயக்கக் காலத்திலும் இயற்கை வெறும் அழகுக்காக மட்டிலும் கையாளப் பெற்றாலும் கவிஞர்கள் அவற்றின் மூலம் தத்துவத்தையும் விளக்க முயன்றனர். ஆறு, கடல், நாடு வருணனையாகக் கையாளப் படுகின்றன. பக்தி இலக்கியம் இயற்கையில் இறை வடிவத்தையே காண்கின்றது. பாரதியும் பாரதிதாசனும் தத்தம் குறிக்கோள்களை இயற்கையில் கண்டு அநுபவிக்கின்றனர். அந்த அநுபவத்தைப் பாவடிவிலும் தந்து நம்மையும் அநுபவிக்கச் செய்கின்றனர். பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு” என்ற நூல் இயற்கையைக் கடைந்தெடுத்த வெண்ணெய் போன்றது. அவருடைய பிற நூல்களிலும் அவர் இயற்கையை வருணிக்கும் பாங்கு நம் உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்கின்றது. இந்த இயலில் பாவேந்தர் நோக்கில் இயற்கையைக் காண்போம்.

அழகு அழகு என்பது ஒரு தத்துவம். “உலகில் அழகுக்கு ஒருவரைக் காண்பது, அவ்வடிவத்தைப் படைப்பவரின் தொழிற் குறைவினாலேயன்றி, அழகென்னும் பொருளுக்கோ எல்லை இல்லை” என்று சித்தாந்தம் செய்து காட்டுவான் கம்பநாடன் சூர்ப்பணகையின் வாய்மொழியாக’. இந்த அழகு காதலர்களை ஒருவர்பால் மற்றொருவரை ஈர்க்கும் பெற்றியது. கவிஞர்களின் உள்ளத்தையும் ஈர்ப்பது, ஆண்டவனே அழியா அழகுடையான்” என்று வருணிக்கப்படுகின்றான். பாவேந்தருக்கு அழகே கவிதையைத் தருகின்றது. அழகே அவர் மனத்தில் பெண்ணாக வடிவம் கொள்ளுகின்றது.

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்;

கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்

தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்

3. ஆரணி, சூர்ப்பு. 66