பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை Y 177 சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்

தனில்,அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்’ இவ்வாறு அழகு தரும் இன்பத்தைப் பேசும் கவிஞர் அந்த அழகு சிறு குழந்தை விழியினில், திருவிளக்கில், நாரெடுத்து நன்மலர் தொடுக்கும் நாரியரின் விரல் வளைவில், கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில், நன்செய் நிலத்தினிலே - அழகு கொலு கொண்டு அதனைத் தன் விழியில் நிறுத்தியதாகக் கூறுவர். இவ்வாறு இணையற்ற பல இடங்களில் விளங்கும் இயற்கையழகினைப் பாவேந்தர் பத்து அறுசீர் விருத்தங்கள் வீதம் பத்து இடங்களைத் தம் கருத்து வண்ணத்தினால் தம் கவிதை வண்ணத்தினால் காட்டுவார். 1. வான்வெளியில் ஐம்பெரும் பூதங்களில் வான்தான் மிகப் பெரியது. ஏனைய நான்கையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது.

(1) வான்: தம்மைச் சூழ்ந்துள்ள வானத்தை முதலில் உற்று நோக்குகின்றார் கவிஞர். அந்த வான் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வண்ண அழகினைப் பொழிந்து நிற்கின்றது. மின்விளக்கு அமைப்பில் ஒளிரும் நாடக அரங்கைப் போல!

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்

வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும்

புலையர்செல் வராம்.இதைத்தன் கண்மீதில் பகலில் எல்லாம்

கண்டுகண் டத்திக் குப்பின் வீண்மீனாய்க் கொப்பளித்த

விரிவானம் பாராய் தம்பி’ என்ற பாடலாக வடிவங் கொள்ளுகின்றது கவிஞரின் கற்பனை. உழைப்பவர் வறியராகவும் அவர் மனப்புண்ணிலே அம்பு பாய்ச்சும் புலையர்கள் செல்வராகவும் இருக்கும் ஏற்றத்தாழ்வு தன் உணர்ச்சியை வெளியிட இயற்கையின் துணையை (இங்கு வானை) நாடுகின்றார்

4. அழகின் சிரிப்பு - பக்கம்1 5. அழகின் சிரிப்பு- பக்கம் 30