பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத்திறன் Y 5

ஊகம் செய்யலாம். இதனால்தான் கவிதையிலுள்ள கவிஞனின் உணர்ச்சிகள் நம்மிடமும் எழுகின்றன. உண்மையான பாட்டநுபவமும் நம்மிடம் உண்டாகின்றது.”

பாட்டுத்திறன். ஏதோ ஒருவகையான உண்மையை அடிப்படையாகக் கொண்டு செஞ்சொற்களால் உள்ளங்கவரும் முறையில் உயர்ந்த கவிதையை உண்டாக்குபவனே கவிஞன். இக்கவிதையைப் படிப்பவர்கள் அக்கவிஞர் உணர்த்தும் உண்மையில் ஒரளவாவது ஈடுபடுவர் என்பது ஒருதலை கவிதையின் தத்துவத்தில் - பாட்டுத்திறனில்-கற்பனை சொல்வளம், யாப்பு முறை, உவமைகள், படிமங்கள், சுவைகள், கவிதை கூறும் உண்மை போன்ற பொருள்கள் அடங்கும். இவற்றை ஒரு சிறிது விளக்கினால் பாட்டுத்திறன் என்ன என்பது புலனாகும். பாவேந்தரின் பாடல்களை இந்த அடிப்படையில் நோக்கினால் அவர்தம் பாட்டுத்திறனை அநுபவிக்கலாம். இதனைத் தொடர்ந்து வரும் இயல்களில் இவை பற்றி விரிவாக நோக்கப் பெறுகின்றன.

7. பாட்டுத்திறன் - பக்கம் 6-9