பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 209

கட்டுடம்பு வற்றிப் போகக்

கையில் வெண்சுருட்டுப் பெட்டியோடும் உலவ வேண்டும்

இதன்பேர்தான் பேரூர்!

-இளை. இலக் 37 (3) பட்டணம்: கைபுனைந்தியற்றிய கவின்பெறு வனப்பைக் காட்டுவது பட்டணம். எத்தனை வகைத் தெருக்கள்! என்னென்ன வகை இல்லங்கள்!

இயற்கையின் உயிர்கட் குள்ளே

மனிதன்தான் எவற்றி னுக்கும் உயர்ச்சியும் தான்.அறிந்த

உண்மையை உலகுக் காக்கும் முயற்சியும், இடைவிடாமல்

முன்னேற்றம் செயலைச் செய்யும் பயிற்சியும் உடையான் என்று

பட்டணம் எடுத்துக் காட்டும்’ என்பது பட்டணத்தைப் பாங்குடன் எடுத்துக் காட்டும் சொல்லோவியம். இங்குப் பொருள் குவிக்கும் படைமக்கள் சிட்டுப் போலப் பறப்பார்கள் பயனை நாடி!

உள்ளத்தை ஏட்டால் தீட்டி

உலகத்தில் புதுமை சேர்க்கும் கொள்கைசேர் நிலைய மெல்லாம் அறிஞரின் கூட்டம் கண்டேன்; கொள்கைஒன் றிருக்க வேறு

கொள்கைக்கே அடிமை யாகும் வெள்ளுடை எழுத்தா ளர்கள்

வெறுப்புறும் செயலும் கண்டேன்’ எழுத்தாளர் தொண்டையும் பட்டணத்தில் போலி வாழ்க்கையையும் சொல்லோவியமாகத் தீட்டுகின்றார் கவிஞர்.

74. அழகின் சிரிப்பு- பக்கம் 54 75. அழகின் சிரிப்பு - பக்கம் 55